உள்ளடக்கத்துக்குச் செல்

கண்டங்கண்டை நீர்க்கோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டங்கண்டை நீர்க்கோலி
இந்தியாவின் அசாமில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகு��்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ப. பிசுகேட்டர்
இருசொற் பெயரீடு
பவுலியா பிசுகேட்டர்
(செனீடர், 1799)
வேறு பெயர்கள் [2]
  • கைட்ரசு பிசுகேட்டர்
    செனீடர், 1799
  • நேட்ரிக்சு பிசுகேட்டர்
    — மெரேம், 1820
  • துரோபிடோனட்டசு குயின்குனிசியேடசு
    செல்ஜெல்]], 1837
  • துரோபிடோனட்டசு பிசுகேட்டர்
    பெளலஞ்சர், 1893
  • நெரோதியா பிசுகேட்டர்
    — வால், 1921
  • சீனோகுரோபிசு பிசுகேட்டர்
    — காக்சு மற்றும் பலர், 1998

கண்டங்கண்டை நீர்கோலி அல்லது ஆசிய தண்ணீர் பாம்பு (Fowlea piscator) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு வகை ஆகும் இப்பாம்புகள் ஆசியாவில் காணப்படுகினறன.[1][3][4]

இந்த பாம்பின் கண்கள் சிறியதாகவும், அதன் நாசியில் இருந்து குறைந்த தூரத்தில் இருக்கும். கண்களைச் சுற்றி கருவளையம் அமைந்திருக்கும். நடுத்தர அளவில் பளபளப்பான மேடான செதில்களைக் கொண்டிருக்கும். இதன் தலை கூர்மையாகவும், கழுத்திலிருந்து வேறுபட்டு தெரியும். உடலின் அடிப்பகுதி வெள்ளையாகக் காணப்படும். இதன் உடல் முழுவதும் சதுரங்க அட்டைப்போனறு புள்ளி அமைப்பு இருக்கும்.

வாழ்விடம்

[தொகு]

இந்தப் பாம்புகள் நன்னீர் ஏரிகள், ஆறுகள் போன்ற இடங்களின் அருகில் காணப்படுகின்றன. இதன் உணவு சிறிய மீன் மற்றும் நீர்த் தவளைகள் ஆகும்.

பரவல்

[தொகு]

இப்பாம்பினங்கள் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாக்கித்தான், இலங்கை, இந்தியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மேற்கு மலேசியா, சீனா ( ஜேஜியாங், ஜியாங்சி, புஜியான் மாகாணம், குவாங்டாங், ஹைனன், குவாங்ஸி, யுன்னான் மாகாணங்கள்), தைவான், இந்தோனேசியா (சுமத்ரா, ஜாவா, போர்னியோ, சுலவேசி) போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

பல மொழிகளில் இதன் பெயர்

[தொகு]
  • அஸ்சாமி - ঢোঁৰা সাপ
  • பெங்காலி - ঢোঁড়া সাপ
  • ஒரியா- ଧଣ୍ଡ ସାପ
  • குஜராத்தி - dendu saap
  • இந்தி - Dendu saap
  • இந்தோனேசியா - Bandotan
  • கன்னடம் - ನೀರು ಹಾವು
  • மராத்தி - दिवड
  • மலையாளம் - നീർക്കോലി
  • தெலுங்கு - నీరు కట్టు (neeru kattu)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Stuart, B.L., Wogan, G., Thy, N., Nguyen, T.Q., Vogel, G., Srinivasulu, C., Srinivasulu, B., Shankar, G., Mohapatra, P., Thakur, S. & Papenfuss, T. (2021). "Fowlea asperrimus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2021: e.T172646A1358305. https://www.iucnredlist.org/species/172646/1358305. பார்த்த நாள்: 15 January 2021. 
  2. சிற்றினம் Xenochrophis piscator at The Reptile Database . www.reptile-database.org.
  3. சிற்றினம் Xenochrophis piscator at The Reptile Database . www.reptile-database.org.
  4. Boulenger GA (1890). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xviii + 541 pp. (Tropidonotus piscator, pp. 349-350).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டங்கண்டை_நீர்க்கோலி&oldid=4123608" இலிருந்து மீள்விக்கப்பட்டது