உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களின் பட்டியல் (List of Indian vice presidential elections) இது. இந்தியாவில் குடியரசு துணைத் தலைவர் மறைமுகமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்ட (தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமனம் செய்யப்பட்ட) உறுப்பினர்களின் தேர்தல் அடிப்படையில், ஒற்றை மாற்றத்தக்க வாக்குகளைப் பயன்படுத்தி விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த வாக்குப்பதிவு ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறுகிறது. மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறையில் இல்லை. ஆனால் மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்கள் இதன் ஒரு பகுதியாக இருப்பதால், துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து சற்று வித்தியாசமானது.[1][2][3]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
ஆண்டு கட்சி கூட்டணி வேட்பாளர்கள் வாக்குகள் முடிவுகள்
படம் கட்சி எண்ணிக்கை %
1952 சுயேச்சை  – சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் போட்டியில்லை வெற்றி
1957 சுயேச்சை  – சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் போட்டியில்லை வெற்றி
1962 சுயேச்சை  – சாகீர் உசேன் 568 97.59 வெற்றி
சுயேச்சை  – என். சி. சாமந்தின்கார் 14 2.41 தோல்வி
1967 சுயேச்சை  – வி. வி. கிரி 483 71.45 வெற்றி
சுயேச்சை  – முகமது அபீப் 193 28.55 தோல்வி
1969 சுயேச்சை  – கோபால் சுவரூப் பதக் போட்டியில்லை வெற்றி
1974 இந்திய தேசிய காங்கிரசு  – பசப்பா தனப்பா ஜாட்டி 521 78.70 வெற்றி
சார்க்கண்டு கட்சி  – நிரால் எனிம் ஹரோ 141 21.30 தோல்வி
1979 சுயேச்சை  – முகம்மது இதயத்துல்லா போட்டியில்லை வெற்றி
1984 இந்திய தேசிய காங்கிரசு  – இரா. வெங்கட்ராமன் 508 71.05 வெற்றி
இந்தியக் குடியரசுக் கட்சி (காம்ப்ளே)  – பி. சி. காம்பிளி 207 28.95 தோல்வி
1987 இந்திய தேசிய காங்கிரசு  – சங்கர் தயாள் சர்மா போட்டியில்லை வெற்றி
1992 இந்திய தேசிய காங்கிரசு  – கே. ஆர். நாராயணன் 700 99.86 வெற்றி
சுயேச்சை  – காக ஜொகிந்தர் சிங் 1 0.14 தோல்வி
1997 ஜனதா தளம் ஐமு கிருஷண் காந்த் 441 61.76 வெற்றி
சிரோமணி அகாலி தளம்  – சுர்சித் சிங் பர்னாலா 273 38.24 தோல்வி
2002 பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி பைரோன் சிங் செகாவத் 454 59.82 வெற்றி
இந்திய தேசிய காங்கிரசு  – சுசில்குமார் சிண்டே 305 40.18 தோல்வி
2007 இந்திய தேசிய காங்கிரசு ஐமுகூ முகம்மது அமீத் அன்சாரி 455 60.50 வெற்றி
பாரதிய ஜனதா கட்சி தேஜகூ நச்மா எப்துல்லா 222 29.52 தோல்வி
2012 இந்திய தேசிய காங்கிரசு ஐமுகூ முகம்மது அமீத் அன்சாரி 490 67.31 வெற்றி
பாரதிய ஜனதா கட்சி தேஜகூ ஜஸ்வந்த் சிங் 238 32.69 தோல்வி
2017 பாரதிய ஜனதா கட்சி தேஜகூ வெங்கையா நாயுடு 516 67.89 வெற்றி
சுயேச்சை ஐமுகூ கோபாலகிருஷ்ண காந்தி 244 32.11 தோல்வி
2022 பாரதிய ஜனதா கட்சி தேஜகூ ஜகதீப் தன்கர் 528 74.37 வெற்றி
இந்திய தேசிய காங்கிரசு ஐஎ மார்கரட் அல்வா 182 25.63 தோல்வி

மேலும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Election of VPI | Vice President of India | Government of India".
  2. "Explained: How the Vice President of India is elected, what the Constitution says about the post". 18 July 2022.
  3. "Election of the Vice President".