இந்திய வாக்காளர் குழு
இந்தியாவின் வாக்காளர் குழு (Indian electoral college) என்பது இந்தியாவின் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 55(2) பிரிவு வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றாகும்.
பதிவு:
[தொகு]வாக்காளர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:
- மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை);
- மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை);
- அனைத்து மாநிலங்களின் சட்டப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்; மற்றும்
- சட்டப்பேரவை கொண்டுள்ள ஒவ்வொரு ஒன்றிய ஆட்சிப்பகுதியின் (காட்டாக, தில்லி, புதுச்சேரி )தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
குறிப்பு: நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை.
- இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் மாநிலங்களைப் பொறுத்தவரை ஓர் சார்பாற்றம் வீதத் தெரிவாண்மை ஆகும்.
ஒரு குறிப்பிட்ட மாநில சட்டமன்ற உறுப்பினரின் வாக்குக்கு வாக்காளர் குழுவில் அதிக்கப்படும் மதிப்பு = மாநிலத்தின் மக்கள்தொகை / (தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை X 1000)
அதாவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் உள்ள வாக்கு மதிப்பு அவர் எத்தனை ஆயிரம் வாக்காளர்களின் சார்பாக உள்ளார் என்பதாகும். இவ்வகையாக அனைத்து மக்களும் மறைமுகமாக குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்க கீழ்கண்டவாறு ஒவ்வொரு மாநிலங்களுக்கு வாக்குகளும் வாக்காளர்களும் பிரிக்கப்பட்டுள்ளது.[1]
இந்த பக்கம் பகுதி (மாநில உறுப்பினரின் வாக்குகளின் மதிப்பு 2011 அடிப்படையில் கணக்கிடப்படல்வேண்டும் தொடர்புடையவை) காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
வரிசை | மாநிலம் | சட்டமன்றத் தொகுதிகள் (elective) | மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)[2] | மக்கள்தொகை (1971 கணக்கெடுப்பு) | ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு | மாநிலத்தின் மொத்த வாக்கின் மதிப்பு |
---|---|---|---|---|---|---|
1. | ஆந்திரப் பிரதேசம் | 294 | 84,665,533 | 43,502,708 | 148 | 43,512 |
2. | அருணாச்சலப் பிரதேசம் | 60 | 1,382,611 | 467,511 | 8 | 480 |
3. | அசாம் | 126 | 31,169,272 | 14,625,152 | 116 | 14,616 |
4. | பீகார் | 243 | 103,804,637 | 42,126,236 | 173 | 42,039 |
5. | சத்தீஸ்கர் | 90 | 25,540,196 | 11,637,494 | 129 | 11,610 |
6. | கோவா | 40 | 1,457,723 | 795,120 | 20 | 800 |
7. | குஜராத் | 182 | 60,383,628 | 26,697,475 | 147 | 26,754 |
8. | அரியானா | 90 | 25,353,081 | 10,036,808 | 112 | 10,080 |
9. | இமாச்சலப் பிரதேசம் | 68 | 6,856,509 | 3,460,434 | 51 | 3,468 |
10. | சம்மு காசுமீர்* | 87 | 12,548,926 | 6,300,000 | 72 | 6,264 |
11. | ஜார்கண்ட் | 81 | 32,966,238 | 14,227,133 | 176 | 14,256 |
12. | கர்நாடகா | 224 | 61,130,740 | 29,299,014 | 131 | 29,344 |
13. | கேரளா | 140 | 33,387,677 | 21,347,375 | 152 | 21,280 |
14. | மத்தியப் பிரதேசம் | 230 | 72,597,565 | 30,016,625 | 131 | 30,130 |
15. | மகாராஷ்டிரா | 288 | 112,372,972 | 50,412,235 | 175 | 50,400 |
16. | மணிப்பூர் | 60 | 2,721,756 | 1,072,753 | 18 | 1,080 |
17. | மேகாலயா | 60 | 2,964,007 | 1,011,699 | 17 | 1,020 |
18. | மிசோரம் | 40 | 1,091,014 | 332,390 | 8 | 320 |
19. | நாகலாந்து | 60 | 1,980,602 | 516,449 | 9 | 540 |
20. | ஒரிசா | 147 | 41,947,358 | 21,944,615 | 149 | 21,903 |
21. | பஞ்சாப் | 117 | 27,704,236 | 13,551,060 | 116 | 13,572 |
22. | ராஜஸ்தான் | 200 | 68,621,012 | 25,765,806 | 129 | 25,800 |
23. | சிக்கிம் | 32 | 607,688 | 209,843 | 7 | 224 |
24. | தமிழ்நாடு | 234 | 72,138,958 | 41,199,168 | 176 | 41,184 |
25. | திரிபுரா | 60 | 3,671,032 | 1,556,342 | 26 | 1,560 |
26. | உத்தரகண்ட் | 70 | 10,116,752 | 4,491,239 | 64 | 4,480 |
27. | உத்தரப்பிரதேசம் | 403 | 199,581,477 | 83,849,905 | 208 | 83,824 |
28. | மேற்கு வங்கம் | 294 | 91,347,736 | 44,312,011 | 151 | 44,394 |
29. | தேசிய தலைநகர் பகுதி, தில்லி | 70 | 16,753,235 | 4,065,698 | 58 | 4,060 |
30. | புதுச்சேரி | 30 | 1,244,464 | 471,707 | 16 | 480 |
மொத்தம் | 4120 | 1,210,193,422 | 516594706 | 516900 |
(*) அரசியலமைப்பு (சம்மு & காசுமீரில் பயன்பாடு ) ஆணை
- மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்- மக்களவை (543) + மாநிலங்களவை (233) = 776
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு = சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மொத்த மதிப்பு / நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை.
- ஒவ்வொரு வாக்கின் மதிப்பு = 549474/776 = 708
- நாடாளுமன்றத்திற்கான மொத்த வாக்குகளின் மதிப்பு = 549408
- மொத்த வாக்காளர்கள் = சட்டமன்ற + நாடாளுமன்ற உறுப்பினர்கள் = 4896
- மொத்த வாக்குகளின் எண்ணிக்கை =1098882