ஆர்டெம் பட்டபூத்தியான்
ஆர்டெம் பட்டபூத்தியான் Ardem Patapoutian | |
---|---|
பிறப்பு | 1967 (அகவை 56–57) பெய்ரூத், லெபனான் |
பணி |
|
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2021) |
கல்விப் பின்னணி | |
கல்வி | |
கல்விப் பணி | |
கல்வி நிலையங்கள் | இசுக்கிரிப்ப்சு ஆய்வு |
ஆர்டெம் பட்டபூத்தியான் (Ardem Patapoutian; ஆர்மீனியம்: Արտեմ Փաթափութեան; பிறப்பு: 1967) ஆர்மீனிய-அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளரும், நரம்பணுவியலாளரும் ஆவார். இவர் அழுத்தம், மெந்தால், வெப்பநிலை ஆகியவற்றைக் கண்டறியும் PIEZO1, PIEZO2, TRPM8 ஏற்பிக���ை வகைப்படுத்தும் பணிக்காக இவர் அறியப்படுகிறார். நரம்பணுவியல் பேராசிரியரான பட்டபூத்தியான், கலிபோர்னியாவில் உள்ள இசுக்கிரிப்சு ஆய்வகத்தில் பணியாற்றுகிறார். 2021-ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் டேவிட் யூலியசு என்ற அமெரிக்கருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.[1][2] நோபல் பரிசு பெற்ற முதலாவது ஆர்மீனிய அறிவியலாளர் இவராவார்.[3]
கல்வி
[தொகு]லெபனான், பெய்ரூத்தில் பிறந்த பட்டபூத்தியான் 1986 இல் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். இவர் 1986-ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்வதற்கு முன்பு பெய்ரூத்தின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்றார். இவர் 1990-ல் இலாசு ஏஞ்சல்சின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1996-ல் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டம் உயிரியலில் பெற்றார். சான் பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் லூயிசு எஃப். ரிச்சார்ட்டுடன் முனைவர் பட்ட பின் ஆய்வாளராக பணிபுரிந்தார். 2000ஆம் ஆண்டில், இவர் இசுகிரிப்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக ஆனார். 2000 மற்றும் 2014க்கு இடையில் இவர் நோவார்டிஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையின் கூடுதல் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். 2014ஆம் ஆண்டு முதல் பட்டபூத்தியான், ஹோவர்ட் ஹியூஸ் மருத்துவ நிறுவனத்தின் ஆய்வாளராக பணியாற்றினார்.[4]
விருதுகள்
[தொகு]கூகுள் இசுகாலரின் கூற்றுப்படி, பட்டபூத்தியான், 68 எச்-சுட்டெண்ணையும்[5] இசுகோபசு ஒன்றின் படி 63 சுட்டெண்ணையும் கொண்டுள்ளார்[6] (மே 2020 நிலவரப்படி). இவர் 2016 முதல் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்கச் சங்கத்தின் உறுப்பினராகவும், 2017 முதல் தேசிய அறிவியல் கழகம்,[7] 2020 முதல் அமெரிக்கக் கலை மற்றும் அறிவியல் கழகத்தின் உறுப்பினராக உள்ளார்.[8] 2017-ல் ஆர்டெம் பட்டபூத்தியான் டபிள்யூ. ஆல்டன் இசுபென்சர் விருது,[9] 2019-ல் ரோசென்ஸ்டீல் விருது,[10] 2020-ல் நரம்பியலுக்கான காவ்லி பரிசு[11] மற்றும் உயிரியல் / உயிரியல் மருத்துவத்தில் பிபிவிஏ அறக்கட்டளை அறிவு விருதுகளையும் பெற்றார்.[12]
வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டுபிடித்ததற்காக டேவிட் ஜூலியசுடன் இணைந்து 2021ஆம் ஆண்டில் இவருக்கு மருத்துவம் அல்லது உடலியங்கியகுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2021". NobelPrize.org. Archived from the original on October 4, 2021. பார்க்கப்பட்ட நாள் October 4, 2021.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2021". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on October 4, 2021. பார்க்கப்பட்ட நாள��� October 4, 2021.
- ↑ "Armenian President congratulates Ardem Patapoutian on winning the Nobel Prize in Medicine". Public Radio of Armenia. October 4, 2021. பார்க்கப்பட்ட நாள் October 5, 2021.
- ↑ "Ardem Patapoutian". www.kavliprize.org. March 12, 2021. Archived from the original on June 24, 2021. பார்க்கப்பட்ட நாள் June 23, 2021.
- ↑ ஆர்டெம் பட்டபூத்தியான் publications indexed by Google Scholar
- ↑ "Patapoutian, Ardem". scopus.com (in ஆங்கிலம்). Scopus. Archived from the original on October 4, 2021.
- ↑ "Ardem Patapoutian". www.nasonline.org. Archived from the original on June 3, 2020. பார்க்கப்பட்ட நாள் January 30, 2021.
- ↑ "Members Elected in 2020". American Academy of Arts & Sciences. Archived from the original on January 22, 2021. பார்க்கப்பட்ட நாள் January 30, 2021.
- ↑ .
- ↑ "Lewis S. Rosenstiel Award for Distinguished Work in Basic Medical Research". www.brandeis.edu. Archived from the original on June 15, 2021. பார்க்கப்பட்ட நாள் January 30, 2021.
- ↑ "2020 Kavli Prize in Neuroscience". www.kavliprize.org. March 12, 2021. Archived from the original on June 24, 2021. பார்க்கப்பட்ட நாள் June 23, 2021.
- ↑ "Fundación BBVA". FBBVA. Archived from the original on January 30, 2021. பார்க்கப்பட்ட நாள் January 30, 2021.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2021". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on October 4, 2021. பார்க்கப்பட்ட நாள் October 4, 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- Ardem Patapoutian, PhD at Scripps Research (scripps.edu)
- The Patapoutian Lab (patapoutianlab.org)
- CV Patapoutian
- Ardem Patapoutian, PhD at Howard Hughes Medical Institute (hhmi.org)
- Ardem Patapoutian in Academic Tree (neurotree.org)
- ஆர்டெம் பட்டபூத்தியான் on Nobelprize.org