ஆண்டலூர்காவு
ஆண்டலூர்காவு என்பது இந்தியாவில் வடகேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் தர்மடம் கிராமத்தில் ஆண்டலூரில் உள்ள புகழ்பெற்ற, முக்கியமான திய்ய சமுதாய உறைமா கோயிலாகும். இந்தப் பழைய கோவில் ராமர் பெயரில் உள்ளது. கோயிலின் முக்கிய திருவிழா மலையாள நாட்காட்டியின் கும்பம் மாதத்தின் முதல் வாரத்தில் (பிப்ரவரி நடுப்பகுதி) கொண்டாடப்படுகிறது: . [1] ஒரு காலகட்டத்தில் களரிப்பாயத்தின் வீரனான தச்சோளி ஒதேனன்தலச்சேரியின் திய்ய ஆதிக்கம் நிறைந்த இந்த காவு ஆண்டலூரில் ஒருமுறை பிரச்சனையை ஏற்படுத்தி, அவர்களால் தண்டிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டு, பாலம் வழியாக நாட்டைக் கடந்தது தொடர்பான கதை இங்கு சொல்லப்படுகிறது. [2]
வருடாந்திர விழா
[தொகு]ஆண்டு விழாவில், மக்கள் இன்னும் பழமையான, புனிதமான பழக்கவழக்கங்களை அனைத்துக்காலத்திலும் பின்பற்றி பக்தியின் ஒற்றுமையை அற்புதமான காட்சிப்படுத்தப்படுகிறது..ராமரின் மகிமையின் ஒரு பகுதியாக இருப்பதன் மகிழ்ச்சியை கிராமத்தார் தம்முள் ஒரு பகுதியாகக் கொண்டு அதனை அனுபவிக்கின்றனர். பெரிய ஒரு பண்பாடானது சாதாரண,பொதுவான வாழ்க்கையில் பெரிய பழங்கால புராணக்கதைகளுடன் ஒன்றிணைத்து சித்தரிக்கும் திருவிழாவாக இது அமைகிறது. திருவிழா பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தொடங்கி ஏழு நாட்கள் நடைபெறுகிறது. அப்போதுபத்துக்கும் மேற்பட்ட தெய்யங்கள் ஆடப்படுகின்றன. அவற்றுள் தெய்வத்தார் என்ற தெய்யம் மிக முக்கியமானதாகும். பக்தர்கள் தெய்வத்தாரை ராமரின் ஒரு ஊடகமாகக் கருதுகின்றனர்.
வழிபாடு
[தொகு]வட மலபாரின் ஒரு பகுதியான ஆண்டலூர் காவுவில் திறையில் (தெய்யம் அல்லது தேயாட்டம்) வழிபாட்டின் முக்கிய சடங்காகும். மாபெரும் காவியமானர���மாயணத்தின் யுத்த காண்டம் காட்சிப்படுத்தப்பட்டு நிகழ்த்தப்படும் அரிய இடங்களில் இவ்விடமும் ஒன்றாகும். இங்கு ராமர், லக்ஷ்மணன், அனுமன் முதன்மைத்தெய்வங்களாக உள்ளனர். மேல் காவு (மேல் கோயில்), தாழே காவு (கீழ் கோயில்) என்று இரண்டு புனிதத் தலங்களைக் கொண்ட வகையில் இந்தக் காவு முக்கியத்தும் பெறுகிறது.[3]
அமைவிடம்
[தொகு]கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ., கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருநது 100 கி.மீ., மங்களூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 165 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. அருகிலுள்ள புகைவண்டி நிலையங்கள் தலச்சேரி (7 கி.மீ.), கண்ணூர் (20 கி.மீ.), மங்களூர் (160 கி.மீ.) ஆகும்.
படத்தொகுப்பு
[தொகு]Gallery
[தொகு]-
திய்ய இன அச்சன்மாருடன் ராம தெய்வத்தார், 1901
-
ஆண்டலூர் காவுவில் திய்யர் ஊரலூர்
-
தெய்யத்திற்கான ஒப்பனை
-
தெய்யம்
-
அனுமன் சிற்பம்