உள்ளடக்கத்துக்குச் செல்

ஈழவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈழத்தில் வாழும் தமிழர்களைப் பற்றி அறிய, ஈழத் தமிழர் என்ற பக்கத்தைக் காணவும்.
ஈழவர்
ഈഴവര്‍
மொத்த மக்கள்தொகை
1,00,00,000 (மலையாளி மக்கள்தொகையில் 22.91%)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மொழி(கள்)
மலையாளம்/தமிழ்
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வில்லவர், பில்லவா, பூசாரி, இல்லத்துப்பிள்ளைமார், தமிழர்

ஈழவர் (Ezhava, மலையாளம்: ഈഴവര്‍) எனப்படுவோர் இந்தியாவின், கேரளத்தின் மாநிலத்தில் வாழுகின்ற ஒரு மிகப்பெரும் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் மாநிலத்தின் முதன்மையான முற்போக்கான பிரிவினரும் ஆவர்.[சான்று தேவை] மலபார் பகுதிகளில் திய்யா என்றும் துளு நாட்டில் பில்லவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.[சான்று தேவை] இவர்கள் ஆயுர்வேத மருத்துவர்களாகவும், படைவீரர்களாகவும், களரி பயிற்சியாளர்களாகவும், விவசாயிகளாகவும், வணிகர்களாகவும் உள்ளனர். சிலர் துணித்தயாரிப்பு, கள்ளிறக்கம் மற்றும் மது வணிகம் ஆகிய தொழில்களில் உள்ளனர். ஈழத்து மன்னனார்கள் என்ற ஈழவ(திய்யா) மன்னர் பரம்பரைகளும் கேரளத்தில் இருந்தது.[1][2][3][4] சமூகத்தினுள் இருந்த அங்கச்சேகவர் என்ற வீரர் பிரிவு[5][6] உள்ளூர் மன்னர்களுக்கு படைத்தளபதிகளாக இருந்துள்ளனர். இவர்களில் சிலர் களரி பயட்டு விளையாட்டில் சிறந்து விளங்கினர்.[7][8] வட கேரளத்தில் உள்ள ஈழவர்கள் சர்க்கஸ் விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டு இந்தியாவின் சிறந்த கலைஞர்களை உருவாக்கியுள்ளனர்.

முந்தைய வரலாறு

[தொகு]

திருவிதாங்கூர் அரசியாக கௌரி இலட்சுமிபாய் (1811-1815) முதல் அரசி பார்வதிபாய் (1815-1829) ஆட்சி செலுத்திய காலங்கள் வரை , ஈழவர் தங்க ஆபரணம் அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆங்கில கவர்னர் கர்னல் மன்றோவின் முயற்சியால் ஈழவர் முதலிய பதினெட்டு சாதிக்காரர்கள் பொன், வெள்ளி நகைகளை அணியலாம் என்று இசைவு தரப்பட்டது.[9]

திருவிதாங்கூர் தோள் சீலை போராட்ட வரலாறு

நாயர், ஈழவர், பரதவர், முக்குவர், புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தோளுக்கு மேல் குறுக்காகச் சேலை அணிய அனுமதிக்கப்படவில்லை. இதற்கு எதிரான போராட்டமே தோள்சீலைப் போராட்டம் எனப்பட்டது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Religion and Social Conflict in South Asia, Page 31,32". Bardwell L. Smith. BRILL Publishers. 1976. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004045104. பார்க்கப்பட்ட நாள் சூலை 29, 2008.
  2. "Customs, law, family system in 19th Century Malaba" (PDF). Praveena Kodoth. CDS Publishers. 1997. Archived from the original (PDF) on 2008-08-07. பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2008.
  3. "Nambutiris: Notes on Some of the People of Malabar". F. Fawcett, Fawsett Fred, Florence. Asian EducationalServices. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120615751. பார்க்கப்பட்ட நாள் சூலை 29, 2008.
  4. "Malabar Manual". William Logan. Asian Educational Services. 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120604466. பார்க்கப்பட்ட நாள் சூலை 29, 2008.
  5. A. Aiyappan, Social Revolution in a Kerala Village: A Study in Culture Change. (Asia Publishing House, 1965), Page 85
  6. Social Revolution in a Kerala Village: A Study in Culture Change.Page 85. Asia Publishing House, 1965. பார்க்கப்பட்ட நாள் 2007-12-28. {{cite book}}: |work= ignored (help)
  7. Social Movements and Social Transformation.Page 23. (Macmillan, 1979. பார்க்கப்பட்ட நாள் 2007-12-28. {{cite book}}: |work= ignored (help)
  8. Farmers of India.Page 359. (Indian Council of Agricultural Research, 1961. பார்க்கப்பட்ட நாள் 01-12-2008. {{cite book}}: |work= ignored (help); Check date values in: |accessdate= (help)
  9. ப.சிவனடி. இந்திய சரித்திரக் களஞ்சியம் 12ம் பாகம் 1811-1820. siddharthan books. pp. 62&63.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழவர்&oldid=4113708" இலிருந்து மீள்விக்கப்பட்டது