ஆசிய நெடுஞ்சாலை 30
Appearance
ஆசிய நெடுஞ்சாலை 30 அல்லது ஏஎச்30 (AH30), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ரசியாவைச் சேர்ந்த உசிரியிஸ்க் என்னும் இடத்திலிருந்து அதே நாட்டைச் சேர்ந்த சித்தா என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, ஒரே நாட்டுக்குள் அடங்கிவிடும் ஒரு சாலையாகும். இதன் மொத்த நீளம் 2,739 கிலோமீட்டர்.
ஏஎச்4 நெடுஞ்சாலையை ரசியாவின் சித்தா என்னும் இடத்தில் சந்திக்கும் இந்தச்சாலை, ஏஎச்6 நெடுஞ்சாலையை உசிரியிஸ்க்கில் சந்திக்கிறது. இது ஏஎச்3 நெடுஞ்சாலையை உலான்பாத்தர் என்னும் இடத்தில் வெட்டிச் செல்கிறது.
நாடுகள்
[தொகு]இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- ரசியா - 2,739 கிமீ
உசாத்துணை
[தொகு]- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)