முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் Mullivaikkal Remembrance Day | |
---|---|
கடைபிடிப்போர் | தமிழர்கள் |
நாள் | 18 மே |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கைத் தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூறப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவுற்றது.
பின்னணி
[தொகு]இலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இயக்கங்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டன. 2007 வரை ஈழப்போரில் குறைந்தது 70,000 பேர் உயிரிழந்தனர்.[1] 2008 இன் இறுதிப் பகுதியிலும், 2009 ஆரம்பத்திலும், ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படைத்துத்துறையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது.[2][3] இரு தரப்புக்குமிடையே ஏறத்தாழ 300,000 பொதுமக்கள் அகப்பட்டனர்.[4] 2009 மே 18 விடுதலைப் புலிகளின் தலைவரைத் தாம் கொன்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.[5] போரின் இறுதிக் கட்டத்தில் ஏறத்தாழ 40,000 பொதுமக்கள் வரை இறந்தனர் என ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவித்தது. இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாடற்ற ஏவுகணைத் தாக்குதல்களில் அகப்பட்டு இறந்தனர் என அவ்வறிக்கை தெரிவித்தது.[6][7][8] இரு தரப்பினரும் போர்க்குற்றங்கள் இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.[9][10][11] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசு இழைத்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை தற்போது விசாரணைக்குட்படுத்தியுள்ளது.[12][13]
நினைவு நாள் நிகழ்வுகளுக்குத் தடை
[தொகு]இலங்கை அரசு மே 18 ஆம் நாளை வெற்றி நாளாக அறிவித்து இராணுவ அணிவகுப்புகளுடன் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.[14] போரில் இறந்த இலங்கைப் படைத்துறையினர் வெற்றி வீரர்களாக அறிவிக்கப்பட்டு இந்நாளில் இலங்கையின் ஏனைய பகுதிகளில் நினைவுகூரப்பட்டு வருகின்றனர்.[15] ஆனாலும், இலங்கை அரசு அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போரில் இறந்த அனைவரும் பெப்ரவரி 4 இல் நினைவுகூரப்பட வேண்டும் எனப் பரிந���துரைத்தும், அரசு அக்கோரிக்கையை நிறைவேற்றவில்லை.[16][17] பதிலாக, இலங்கைத் தமிழர் இறந்த தமது உறவுகளை நினைவு கூர இலங்கை அரசு தடை விதித்தது.[18][19] மே 18 ஐ ஒட்டிய நாட்களில், வட, கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்படுகின்றன.[20][21][22]
தமிழர்கள் நிகழ்த்தும் எந்த நினைவுகூரலையும் இராணுவமும் இலங்கை அரசும் மக்கள் விடுதலைப் புலிகளை நினைவுகூருவதாகவே கருதுகிறது.[23] பொதுமக்கள் தமது வீடுகளில் இறந்த விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தலாம் என இராணுவம் கூறியிருந்தாலும், வீடுகளில் புகுந்து இராணுவத்தினர் இந்நிகழ்வுகளைத் தடுத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.[24][25]
நினைவு நாள்
[தொகு]பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் மத்தியிலும் மே 18 ஆம் நாளிலும் அதற்கண்மைய நாட்களிலும் இலங்கைத் தமிழர் சிறிய அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளைத் இறந்த உறவுகளை நினைத்து நினைவு கூர்ந்து வருகின்றனர்.[26][27][28] ஆனாலும், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகள் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.[29][30] தமிழ் அரசியல் தலைவர���கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.[31][32]
புலம்பெயர் ஈழத்தமிழர் தாம் வாழும் நாடுகளில் இந்நினைவு நாளை பாரிய அளவில் கூடி நினைவு கூருகின்றனர்.[33][34][35][36]
2015 நினைவுகூரல்
[தொகு]- வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்[37].
2016 நினைவுகூரல்
[தொகு]- மே 18, 2016 - உலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவுகூர்ந்தனர்.[38]
- கிழக்குப் பாடசாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் என்னும் நினைவிடத்தில், வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.[39]
2017 நினைவுகூரல்
[தொகு]- மே 18, 2017 - நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு வடக்கு முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன், எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஆகியோர் வந்திருந்து உரையாற்றினர்[40]
2018 நினைவுகூரல்
[தொகு]- மே 18, 2018 - இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களும், வெளிநாட்டில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்களும் நினைவுகூர்ந்தனர்.[41]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Buerk, Roland (16 சூலை 2007). "Defiant Tigers cling to last bastion". பிபிசி. http://news.bbc.co.uk/1/hi/6898002.stm.
- ↑ Harrison, Frances (11 அக்டோபர் 2012). "The broken survivors of Sri Lanka's civil war". பிபிசி. http://www.bbc.co.uk/news/world-south-asia-19843977.
- ↑ "UN chief announces Sri Lanka trip". அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம். ஏஎஃப்பி. 19 மே 2009. http://www.unhcr.org/cgi-bin/texis/vtx/refdaily?pass=463ef21123&date=2009-05-20&cat=Asia/Pacific.
- ↑ "UN must investigate Sri Lanka rights violations". பன்னாட்டு மன்னிப்பு அவை. 17 மே 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Hull, C. Bryson; Sirilal, Ranga (18 மே 2009). "Fighting ends, rebel leader Prabhakaran dead". Die Welt. http://www.welt.de/english-news/article3758496/Fighting-ends-rebel-leader-Prabhakaran-dead.html.
- ↑ Aneez, Shihar; Sirilal, Ranga (7 ஏப்ரல் 2014). "Sri Lanka won't cooperate U.N. war crime probe: foreign minister". ராய்ட்டர்ஸ் இம் மூலத்தில் இருந்து 2014-04-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140413052350/http://www.reuters.com/article/2014/04/07/us-sri-lanka-un-rights-idUSBREA3616520140407.
- ↑ Lynch, Colum (22 ஏப்ரல் 2011). "U.N.: Sri Lanka’s crushing of Tamil Tigers may have killed 40,000 civilians". வாசிங்டன் போஸ்ட். http://www.washingtonpost.com/world/un-sri-lankas-crushing-of-tamil-tigers-may-have-killed-40000-civilians/2011/04/21/AFU14hJE_story.html.
- ↑ "UN: Sri Lanka mass deaths may be 'war crimes'". அல்ஜசீரா. 25 ஏப்ரல் 2011. http://english.aljazeera.net/news/asia/2011/04/2011425214422583975.html.
- ↑ Davidson, Helen (5 பெப்ரவரி 2014). "Sri Lankan security forces destroyed evidence of war crimes, report claims". தி கார்டியன். http://www.theguardian.com/world/2014/feb/05/sri-lankan-forces-committed-flagrant-and-reckless-violations-of-human-rights-report-claims.
- ↑ "Q&A: Post-war Sri Lanka". பிபிசி. 20 செப்டம்பர் 2013. http://www.bbc.co.uk/news/world-south-asia-11393458.
- ↑ Welch, Dylan (26 அக்டோபர் 2011). "Fraser supports call for Sri Lanka war crimes inquiry". தி ஏஜ். http://www.theage.com.au/national/fraser-supports-call-for-sri-lanka-war-crimes-inquiry-20111025-1mi3w.html.
- ↑ "United Nations launches Sri Lanka war crimes inquiry; Australia declines to support resolution". ஏபிசி. ஏஎஃப்பி. 28 மார்ச் 2014. http://www.abc.net.au/news/2014-03-28/an-un-sri-lanka-probe/5350786.
- ↑ Buncombe, Andrew (27 மார்ச் 2014). "UN launches official investigation into Sri Lankan war crimes". தி இன்டிபென்டென்ட். http://www.independent.co.uk/news/world/asia/un-launches-official-investigation-into-srilankan-war-crimes-9219611.html.
- ↑ "War memorial events banned in North". சண்டே டைம்சு. 11 மே 2014. http://www.sundaytimes.lk/140511/news/war-memorial-events-banned-in-north-98763.html.
- ↑ Dias, Supun (12 மே 2010). "Week-long programme to mark war heroes’ week". டெய்லி மிரர். http://print2.dailymirror.lk/news/news/10371.html.
- ↑ "Report of the Commission of Inquiry on Lessons Learnt and Reconciliation" (PDF). இலங்கை அரசு. நவம்பர் 2011. pp. 387–388. Archived from the original (PDF) on 2012-01-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-19.
- ↑ Perera, Jehan (29 அக்டோபர் 2013). "The rational quest for mutually beneficial solutions starts now". தி ஐலண்டு. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=91057.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka (PDF). ஐக்கிய நாடுகள் அவை. 31 மார்ச் 2011. p. 80.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ "Victims or active agents of change?". சிலோன் டுடே. 18 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2015-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923224248/http://www.ceylontoday.lk/59-45193-news-detail-victims-or-active-agents-of-change.html.
- ↑ Perera, Melani Manel (13 மே 2014). "Sri Lanka preparing Victory Day but only the south will celebrate". ஏசியா நியூஸ். http://www.asianews.it/news-en/Sri-Lanka-preparing-Victory-Day-but-only-the-south-will-celebrate-31067.html.
- ↑ "SL military wants Jaffna University shut down on Mu’l’livaaykkaal Day". தமிழ்நெட். 6 மே 2014. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37201.
- ↑ "Jaffna University To Close On May 18". த சண்டே லீடர். 11 மே 2014 இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303220214/http://www.thesundayleader.lk/2014/05/11/jaffna-university-to-close-on-may-18/.
- ↑ "No War Commemoration Allowed in Lanka North". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 11 May 2014. http://www.newindianexpress.com/world/No-War-Commemoration-Allowed-in-Lanka-North/2014/05/11/article2219195.ece.
- ↑ "Sri Lanka bans commemoration of Tiger rebels". காலீச் டைம்சு. ஏஎஃப்பி. 11 மே 2014 இம் மூலத்தில் இருந்து 2014-05-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140518011223/http://www.khaleejtimes.com/kt-article-display-1.asp?xfile=data/international/2014/May/international_May252.xml§ion=international.
- ↑ "Living with insecurity: Marginalization and sexual violence against women in north and east Sri Lanka". Minority Rights Group International. 16 அக்டோபர் 2013. p. 13.
- ↑ "Sri Lanka Tamils defy ban on rebel memorial". Arab News. ஏஎஃப்பி. 19 மே 2013. http://www.arabnews.com/news/452083.
- ↑ Srinivasan, Meera (10 மே 2014). "Sri Lanka seizes ammunition". தி இந்து. http://www.thehindu.com/news/international/south-asia/sri-lanka-seizes-ammunition/article5996599.ece.
- ↑ "Mu'l'livaaykkaal Remembrance observed in Vanni". தமிழ்நெட். 19 மே 2012. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35195.
- ↑ "SL police disrupts elected councillors from conducting Mu'l'livaaykkaal Remembrance". தமிழ்நெட். 16 மே 2014. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37215.
- ↑ Mohan, Sulochana Ramiah. "TAK to commemorate war dead". சிலோன் டுடே இம் மூலத்தில் இருந்து 2014-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141023034304/http://ceylontoday.lk/16-64051-news-detail-itak-to-commemorate-war-dead.html.
- ↑ "SL Police arrests TNPF politicians on Mu'l'livaaykkaal Remembrance Day in Mannaar". தமிழ்நெட். 18 மே 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36325.
- ↑ "15 arrested for allegedly marking Prabha’s death". சண்டே டைம்சு. 19 மே 2013. http://www.sundaytimes.lk/130519/news/15-arrested-for-allegedly-marking-prabhas-death-45218.html.
- ↑ "British MPs call for war crimes probes at Mu’l’livaaykkaal Remembrance". தமிழ்நெட். 20 மே 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31788.
- ↑ "International probe into Sri Lanka’s war crimes urged at British rally". தமிழ்நெட். 19 மே 2011. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33968.
- ↑ "Independent international investigation on Sri Lanka called for at London event". தமிழ்நெட். 20 மே 2012. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35197.
- ↑ "Diaspora Tamils observe Mu’l’li-vaaykkaal Genocide remembrance events". தமிழ்நெட். 19 மே 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36331.
- ↑ "முள்ளிவாய்க்காலில் வடமாகாண முதல்வர் அஞ்சலி". பிபிசி தமிழோசை. 18 மே 2015. http://www.bbc.com/tamil/sri_lanka/2015/05/150518_mullivaikkaalmay18.
- ↑ "Tamils mourn 7 years after 2009". தமிழ் கார்டியன். 22 மே 2016.
- ↑ "முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி அஞ்சலி". தினகரன் (இலங்கை). 18 மே 2016. http://www.thinakaran.lk/?q=2016/05/18/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/10086.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ஆரம்பம்". தினகரன் (இலங்கை). 18 மே 2017 இம் மூலத்தில் இருந்து 2020-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201024092130/https://www.tamilwin.com/community/01/146080?ref=home-top-trending.
- ↑ "Genocide Remembrance evolves into logical uprising embracing emotions of people". தமிழ்நெட். 18 மே 2018. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39071.