P இந்த நாடுகள் மதுரோதைய வளநாடு, மதுராந்தக வளநாடு, கேரள சிங்க வளநாடு. அதளையூர் வளநாடு, திருபுவன முழுதுடையார் வளநாடு, வரகுணவளநாடு, ஜெயமாணிக்க வளநாடு, என்பன போன்ற பிரிவுகளும் அடங்கும். இவற்றிடையே பாகனூர் கூற்றம், துகலுர் கூற்றம், முத்துார் கூற்றம், மிழலைக் கூற்றம் போன்ற உட்பிரிவுகளும் இருந்தமை தெரியவருகின்றன. இவை யனைத்தும் பாண்டியர்கள், சோழர்கள் பிற்காலப் பாண்டியர் ஆகிய பேரரசுகளின் கால நிலையாகும். எனினும், இவை மதுரை-திருச்சி நாயக்க மன்னர்களது ஆட்சியில் பெரிதும் மாறுதல் பெற்றன. இதற்கு அவர்கள் தங்களது பூர்வீக நாடான வடுகர். மாநிலத் தில் அப்பொழுது நடைமுறையில்இருந்த அமர நாயக்க முறையான பாளையக்காரர் முறை நிர்வாகத்தை பாண்டிய நாட்டில் புகுத்தி கடைப்பிடித்தது காரண மாகும். இதன் விளைவாக தென்பாண்டிச் சீமை எழுபத்தியிரண்டு பாளையப்பட்டுக்களாகப் பிரிக்கப் பட்டு, பெரும் நிலக்கிழார்கள், குறிப்பிடப்பட்ட எல்லைக்குட்பட்ட பாளையப் பகுதிகளின் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டனர். சீர்மை என்ற பெரும் பிரிவில் இந்தப் பாளையங்களும், சமுத்திரம், மஜோரா, பட்டி என்ற உட்பிரிவுகளும் இருந்தன. கி. பி. 1736 இல் நாயக்க வழியினரது ஆட்சி முறை முடிவுக்கு வந்தது. இதையடுத்து தென் மாநிலம் அனைத்தையும் உரிமை கொண்டாடிய ஆற்காட்டு நவாபுகளின் ஆட்சியின் போதும், பின்னர் அவர்களிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கிழக்கு இந்தியக் கும்பெனியாரது நிர்வாகத் தின் போதும், நாயக்க மன்னர்களது ஆட்சியின் போதும் இந்நிலப் பிரிவுகள் நீடித்தன.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/14
Appearance