இராமநாதபுரம் மாவட்டம் பற்றி. = தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைக்கு மேற்காகவும். தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களுக்குத் தெற் காகவும், கிழக்கு மலைத்தொடர் பிரிவு, மதுரை மாவட்டத்திற்குக் கிழக்காகவும், நெல்லே மாவட்டத் திற்கு வடக்காகவும் உள்ளது இன்றைய இராமநாத புரம் மாவட்டம். மதுரையிலும், கொற்கையிலும் இருந்து பன்னெடுங் காலம் ஆட்சி செய்த பாண்டியர்களது அதிகார வரம்பிற்குள்ளும், அவர்களையடுத்து சோழர்கள். இஸ்லாமியர், நாயக்கர், சேதுபதி மன்னர்கள் ஆகி யோரது ஆட்சிகளிலும் இந்தப்பகுதி இருந்துள்ளது. அன்றைய நாட்களில் இப்பகுதி நாடு, வளநாடு, கூற்றம் என பல்வேறு பிரிவுகளாக நிர்வாகத்தின் பொருட்டுப் பிரிக்கப்பட்டிருந்தது. so வேம்புக்குடி நாடு (சாத்துர் வட்டம்), வேம்பு நாடு, பருத்திக்குடி நா டு (அருப்புக்கோட்டை வட்டம்), வடதலைச் செம்பிநாடு (முதுகுளத்துார் வட்டம்), கீழச் செம்பிநாடு, செவ்விருக்கை நாடு (இராமநாதபுரம் வட்டம்), பொலியூர் நாடு (கமுதி வட்டம்), கைக்கை நாடு (பரமக்குடி வட்டம்), ராஜராஜப் பாண்டி நாடு (மானமதுரை வட்டம்), தென்னலை நாடு, களவழிநாடு (தேவகோட்டை வ ட் ட ம்), கானப்பேர் நா டு (சிவகங்கை வட்டம்), தி ரு ப் பி டா வூ ர் நாடு (திருப்பத்துர் வட்டம்), இடையளநாடு, தழையூர் நாடு (திருவாடானை வட்டம்) என்று வழங்கப்பட்ட நாடுகளின் தொகுதி என்று இதனேக் கருதுவதே பொருத்த முடையதாகும். -
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/13
Appearance