விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 17, 2011
Appearance
இலங்கை வேடர்கள் என்போர் இலங்கை காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையைப் பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர். இவர்கள் பேச்சு மொழி தற்போது இலங்கையில் வாழும் ஏனைய சமூகத்தினரின் மொழியில் இருந்து வேறுப்பட்டது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கும் அதேவேளை, திராவிட மொழிகளை ஒத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தற்காலத்தில் வேடர்களில் பெரும்பான்மையானோர் இலங்கையின் ஏனைய சமூகத்தவருடன் இணைந்து கலந்து தற்கால வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். அண்மைக் காலங்களில் இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு ஏனைய சமூகத்துடன் இணைக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது. |