இலால்குடி
இலால்குடி | |
ஆள்கூறு | 10°52′16″N 78°49′11″E / 10.8712°N 78.8197°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
வட்டம் | இலால்குடி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
23,740 (2011[update]) • 2,374/km2 (6,149/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
10 சதுர கிலோமீட்டர்கள் (3.9 sq mi) • 83.26 மீட்டர்கள் (273.2 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/lalgudi |
இலால்குடி (ஆங்கிலம்:Lalgudi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள, திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்
[தொகு]16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார்.[4][5]
அமைவிடம்
[தொகு]திருச்சி - சிதம்பரம் சாலையில், 23 கி.மீ. தொலைவில், இலால்குடி நகராட்சி உள்ளது. அருகமைந்த இலால்குடி தொடருந்து நிலையம் 0.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
நகராட்சியின் அமைப்பு
[தொகு]10 ச.கி.மீ. பரப்பும், 24 வார்டுகளும், 96 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சி, இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 10°52′N 78°50′E / 10.87°N 78.83°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 57 மீட்டர் (187 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகராட்சி 6,129 வீடுகளும், 23,740 மக்கள்தொகையும் கொண்டது.[8][9]
கோயில்கள்
[தொகு]- இலால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்
- நன்னிமங்கலம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இலால்குடி - சாத்தமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த திருக்கோவிலில் பச்சைகல் மரகத லிங்க திருமேனியில் சிவபெருமான் காட்சி தருகிறார்.
புகழ்பெற்றவர்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ kumbakonam corporaon and 19 muniicipalites
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
- ↑ இலால்குடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ "Lalgudi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ இலால்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Lalgudi Town Panchayat