முற்காலச் சோழர்களின் காலம் (பொ.ஊ.மு. 400–பொ.ஊ.மு. 300), அதாவது முந்தைய மற்றும் பிந்தைய சங்க காலங்கள் ஆகும். பண்டைய தமிழ்நாட்டை ஆண்ட மூன்று முக்கிய பேரரசுகளில் ஒன்றாக சோழர் குலம் இருந்துள்ளது. இவர்கள் உறையூர் மற்றும் காவேரிப்பூம்பட்டிணத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். சங்க இலக்கியம் மற்றும் பிற்கால நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நாம் இவர்களைப் பற்றி அறிந்தாலும், அவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. கிரேக்கத்தில் பெப்பிலஸ் மரிஸ் எரித்ரை என்று கூறப்படும் பயணக் கட்டுரையிலும், வரைபடங்களிலும் முற்காலச் சோழர்களின் நாடு மற்றும் அதன் நகரங்கள், துறைமுகங்கள், வாணிபம் போன்றவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.[1][2][3]
முற்காலம் என்பது சங்ககாலத்தையும் அதற்கும் முந்திய தொன்ம காலத்தையும் குறிக்கும். இவற்றின் விரிவுகளை கீழ்காணும் இருவேறு கட்டுரைகளில் காணலாம்.
↑K.A.N. Sashtri, A History of South India, pp 109–112
↑'There were three levels of redistribution corresponding to the three categories of chieftains, namely: the Ventar, Velir and Kilar in descending order. Ventar were the chieftains of the three major lineages, viz Cera, Cola and Pandya. Velir were mostly hill chieftains, while Kilar were the headmen of settlements...' —"Perspectives on Kerala History". P.J.Cherian (Ed). Kerala Council for Historical Research. Archived from the original on 26 August 2006. பார்க்கப்பட்ட நாள் 15 November 2006.