உள்ளடக்கத்துக்குச் செல்

முகேசு அம்பானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகேஷ் திருபாய் அம்பானி
முகேஷ் அம்பானி
பிறப்புஏப்ரல் 19, 1957 (1957-04-19) (அகவை 67)
ஏடன்[1]
இருப்பிடம்மும்பை, இந்தியா
தேசியம்இந்தியன்
இனம்குஜராத்தி பனியா
கல்விமும்பை பல்கலைக்கழகம் (வேதியியல் பொறியியலில் இளங்கலை
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்(வணிக மேலாண்மை முதுகலை - இடையே வெளியேறல்)
பணிதலைவர், மேலாண் இயக்குனர் -ரிலையன்ஸ் நிறுவனங்கள்
சொத்து மதிப்பு$93.2 பில்லியன்(சனவரி 2022)[2]
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
நீடா அம்பானி
பிள்ளைகள்இஷா, ஆனந்த் மற்றும் ஆகாஷ் [3]

முகேசு அம்பானி (19 ஆம் தேதி, ஏப்ரல் மாதம் 1957 ஆம் ஆண்டு பிறந்தவர்) ஓர் இந்தியத் தொழில் அதிபர் ஆவார். இவர் பார்ச்சூன் குளோபல் 500[4] பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி (நிர்வாக இயக்குநர்) பதவிகளை வகிப்பவரும் ஆவார். இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான ஆர்.ஐ.எல் அதன் பங்குச் சந்தை மதிப்பு மற்றும் விற்பனை அளவில் மதிப்புமிக்க நிறுவனமாக விளங்குகிறது.[5] இவர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தனக்கு சொந்தமாக 49.46% பங்கை கொண்டுள்ளார் மேலும் உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் இயக்குபவர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு துறை[6] உரிமையாளர் ஆவார். முகேசுவின் இளைய சகோதரரான அனில் அம்பானி ரிலையன்ஸ் குழுமதின் தலைவர் ஆவார். அம்பானி குடும்பம் இந்தியாவிலேயே பணக்கார குடும்பமாகும் மேலும் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றிறுக்கிறார், இவர்கள் தங்கள் செல்வத்தை ஒட்டு மொத்தமாக ரிலையன்ஸ் இந்திய குழுமத்தின் நிறுவுனரான திருபாய் அம்பானி அவர்களிடமிருந்து வாரிசாக பெற்றனர்.[7]

2010 ல் ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ் வெளியிடும் முக்கியமான 68 நபர்கள் பட்டியலில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள் மத்தியில் இவர் இடம் பெற்றார்[8],மேலும் 2012 ல் இவர் ஆசியாவில்[9] இரண்டாவது பணக்கார மனிதராகவும், உலகில் 19 வது பணக்கார மனிதராகவும் இடம்பெற்ற இவரது தனிப்பட்ட சொத்தின் மதிப்பு அமெரிக்க டாலர் ($) 22.3பில்லியன் ஆகும். 2007 ல் இந்திய பங்கு சந்தையில் ஏற்படட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் உயர்ந்தது. இதன் காரணமாக இவர் உலகின் அதி பணக்கார மனிதராக அறியப்பட்டார்.[10]

இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குநர்கள் குழுவில் ஒரு உறுப்பினராவார், மற்றும் சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் தற்போதைய உறுப்பினராகவும் உள்ளார்.

2012 ல் உலகின் 2 வது பணக்கார விளையாட்டு உரிமையாளராக[11] முகேசு அம்பானியை ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ் பட்டியலிட்டது. பணக்கார விளையாட்டு உரிமையாளர்களின் பட்டியலின் படி இவர் செல்சீ மற்றும் ஏசி மிலனை காட்டிலும் பணக்காரராக அறியப்படுகிறார். அம்பானி இந்திய பிரீமியர் லீக் உள்நாட்டு கிரிக்கெட் கிளபின் மும்பை இந்தியன்ஸ் அனியின் உரிமையாளர் ஆவார்.[12]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

முகேசு அம்பானி, திருபாய் அம்பானியின் மூத்த மகனாவார், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிற்பகுதியில் நிறுவுனராவார்.[13] இவருக்கு அனில் என்று ஒரு சகோதரனும், தீப்தீ சல்கோன்கர் மற்ற��ம் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.[14]

அம்பானியின் குடும்பம் 1970 வரை மும்பை புலீஸ்வரில் உள்ள இரண்டு படுக்கையறை கொண்ட குடியிருப்பில் வசித்து வந்தது.[15] திருபாய் அம்பானி பின்னர் கொலாபா உள்ள 'ஸீ வின்ட்' என்றழைக்கப்படும் 14-மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார் சமீப காலம் வரை முகேசு மற்றும் அனில் அவர்கள், அவர்களின் குடும்பங்களுடன் இங்கு வெவ்வேறு தளங்களில் வசித்து வந்தனர்.[16]

முகேசு அம்பானி தனது ஆரம்ப கல்வியை மும்பையில் உள்ள அபே மொரிச்சா பள்ளியிலும் தனது இரசாயன பொறியியல் பட்டப்படிப்பை தற்பொழுது இன்ஸ்டிடுட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி, மும்பை என்று அழைக்கப்படும் யுடிசிடீயிலும் முடிததார். இவர் பல்கலைக்கழக தேர்வில் ஆறாவது இடத்தை பிடித்தார்.[17] முகேசு பின்னர் இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகம் அல்லது ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகதில் எம்பிஏ எனப்படும் இரண்டு ஆண்டு திட்ட படிப்பில் சேர்ந்தார் ஆனால் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் 1980இல் படிப்பைக் கைவிட்டார்.[18] இந்திரா காந்தியி்ன் நிர்வாகம் 1980 இன் முற்பகுதியில் PFY (பாலியஸ்டர் இழை நூல்) உற்பத்தியில் தனியார் துறைகளை ஊக்குவித்தது. திருபாய் அம்பானி அவர்கள் பாலியஸ்டர் இழை நூல்( PFY) உற்பத்தி செயயும் ஆலை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். டாடா, பிர்லா மற்றும் 43 இதர போட்டியளர்களுக்கு மத்தியில் திருபாய் அம்பானி அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.[19] பாலியஸ்டர் இழை நூல் உற்பத்தி (PFY) ஆலையின் உருவாக்கத்தில் உதவுவதற்காக திருபாய், அவரது மூத்த மகன் முகேசுவை இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அழைத்துவந்தார். முகேஷ் அம்பானி, அவருடைய தந்தைக்கு உதவுவதற்காகவும் ரிலயன்ஸ்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலியஸ்டர் இழைகள் மற்றும் 1981 இல் தொடங்கிய பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையி்ன் ஆரம்பத்திற்காகவும் தனது படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.

தொழில்

[தொகு]

இவர் 1981இல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசில் சேர்ந்தார். இவரது பயணம் ஒருங்கிணைந்த ரிலையன்ஸ் இன் ஆரம்ப நிலையான நெசவு தொழிலிருந்து பாலியஸ்டர் இழைகள் உற்பத்தியில் தொடங்கி மேலும் பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சியாக தொடர்ந்து விரிவடைந்தது.

அம்பானி, உலகின் மிகப்பெரிய மற்றும் பல பாகங்களை கொண்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளை கொண்ட ரிலையன்ஸ் இன்ஃபோகாம் லிமிடெட்டை (தற்பொழுது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்) நிறுவினார்.

உலகின் மிகப்பெரிய அடித்தள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவின் ஜாம்நகரில் உள்ளது. இதன் தற்போதைய சுத்திகரிப்பு திறன் ஒரு நாளைக்கு 660,000 பீப்பாய்கள் (வருடத்திற்கு 33 மில்லியன் டன்கள்) மேலும் இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோகெமிக்கல், மின் உற்பத்தி, துறைமுகம் மற்றும் இவைகளின் தொடர்புடைய உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளின் நிர்வாகத்தை இயக்குபவராகவும் மற்றும் வழிவகுத்து நடத்தி செல்பவராகவும் அம்பானி உள்ளார்.

வாரிய உறுப்பினரகங்கள்

[தொகு]
  • தலைவர், நிர்வாக இயக்குநர், நிதி செயற்குழுவின் தலைவர், மற்றும் ஊழியர்களின் பங்குதொகையின் இழப்பீட்டு செயற்குழுவின் உறுப்பினர்,ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்
  • முன்னாள் தலைவர்,இந்தியன் பெட்ரோகெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
  • முன்னாள் துணை தலைவர்,ரிலையன்ஸ் பெட்ரோலியம்
  • வாரியத் தலைவர்,ரிலையன்ஸ் பெட்ரோலியம்
  • தலைவர்,தணிக்கை குழு தலைவர்,ரிலையன்ஸ் சில்லறை வியாபார லிமிடெட்
  • தலைவர்,ரிலையன்ஸ் ஆய்வு மற்றும் உற்பத்தி டிஎம்சிசி
  • இயக்குனர், கடன் செயற்குழு உறுப்பினர்,மற்றும் இழப்பீடு & அனுகூலங்களின் செயற்குழு உறுப்பினர், அமெரிக்க கார்பரேசன் வங்கி[20]

விருதுகள் மற்றும் கீர்த்திகள்

[தொகு]
ஆண்டு விருது அல்லது மரியாதை விருதி்ன் அல்லது பட்டத்தின் பெயர் விருது வழங்கும் அமைப்பு
2010 பிரதான விருந்தில் குளோபல் விஷன் விருது[21] ஆசியா பொதுநல ஸ்தாபனம்
2010 இந்த ஆண்டின் சிறந்த வர்த்தக தலைவர் என்டிடிவி இந்தியா
2010 இந்த வருடத்திற்கான தொழிலதிபர் விருது[22] பைனான்சியல் குரோனிக்கிள்
2010 2009 ஆம் ஆண்டிற்கான ஜூரான் தர பதக்கம்[23] இந்திய வியாபாரிகளின் சேம்பர் (ஐஎம்சி)
2010 பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக பள்ளி தலைவரின் பதக்கம் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம்.
2007 அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் விருது அமெரிக்க இந்திய வர்த்தக அலோசனை சபை.
2007 இந்த ஆண்டுக்குரிய சித்திரலேகா நபர் விருது குஜராத் அரசு.
2004 உலக தொடர்பு விருது மொத்த தொலைதொடர்பு.
  • ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யுவில் சிறந்த 50 உலக தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான தரவரிசையில் 5 வது சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஐக்கிய நாடுகளின் எம்டிஜி(MDG) ஆலோசனை குழுவில் இருக்கும் ஒரே இந்தியர்.[24]
  • வியாபார அபிவிருத்தி ஆலோசனை சபையின்(WBCSD) துணை தலைவராக 2010 ல் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவரது மனைவி நீதா அம்பானி ஆவார் மேலும் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மும்பையில் அண்டிலியா (கட்டிடம்) என்று பெயரிடப்பட்ட தனிப்பட்ட 27 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் வசித்துவருகின்றனர்.[25] இவ்வீட்டின் மதிப்பு அமெரிக்க ஐக்கிய டாலரில்($) 2 பில்லியன்கள் ஆகும்,இது வரலாற்றிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடாகும்.[26]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NDTV Mukesh born in Yemen". Archived from the original on 2010-03-15. பார்க்கப்பட்ட நாள் 2009-11-01.
  2. "Forbes profile: Mukesh Ambani". Forbes. பார்க்கப்பட்ட நாள் 13 September 2020.
  3. NY Times pics on Mukesh Ambani
  4. "FORTUNE Global 500 2006: Countries". CNN. 24 July 2006. http://money.cnn.com/magazines/fortune/global500/2006/countries/I.html. பார்த்த நாள்: 9 February 2010. 
  5. "Market Capitalization". Indian stock markets:Companies by Market Capitalization. Rediff.com India Limited.
  6. "Mukesh Ambani Backed by India Power Holdings Proves Asia’s Top Billionaire". Bloomberg. Mar 5, 2012. http://www.bloomberg.com/news/2012-03-05/ambani-backed-by-india-power-is-asia-s-no-1-billionaire.html. பார்த்த நாள்: 9 March 2007. "Year 2012." 
  7. Gayatri, R Shah (22 October 2010). "Ambani & Sons': The story of India's richest family". CNNGO. http://www.cnngo.com/mumbai/shop/ambani-sons-available-india-now-sold-out-383418. 
  8. "Sonia Gandhi, Tata in Forbes' most powerful people list". The Hindu (Chennai, India). 4 November 2010. http://www.thehindu.com/news/national/article868374.ece. 
  9. "Forbes topic page on Mukesh Ambani". Forbes இம் மூலத்தில் இருந்து 12 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/666vc9Kwp?url=http://www.forbes.com/billionaires/. பார்த்த நாள்: 5 April 2010. 
  10. "Mukesh Ambani Becomes World’s Richest Man". Economic Times. 30 October 2007. http://economictimes.indiatimes.com/Corporate_Trends/Mukesh_Ambani_worlds_richest_now/articleshow/2500036.cms. பார்த்த நாள்: 5 April 2010. 
  11. http://www.forbes.com/pictures/eddf45gffi/mukesh-ambani/#gallerycontent
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-04-12.
  13. "Mukesh Ambani | Reliance Industries | Dhirubhai Ambani | Worlds Richest Men – Oneindia Living". Living.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 28 October 2010.
  14. "Ambani sisters in Mumbai for family meeting". The Times of India - India Business (Bennett, Coleman & Co. Ltd). 22 November 2004 இம் மூலத்தில் இருந்து 23 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130723101238/http://articles.timesofindia.indiatimes.com/2004-11-22/india-business/27154492_1_ownership-issues-mukesh-ambani-ambani-brothers. பார்த்த நாள்: 17 October 2011. 
  15. "Reliance didn't grow on permit raj: Anil Ambani". rediff.com. 11 May 2002. பார்க்கப்பட்ட நாள் 28 October 2010.
  16. Yardley, Jim (28 October 2010). "Soaring Above India's Poverty, a 27-Story Home". The New York Times. http://www.nytimes.com/2010/10/29/world/asia/29mumbai.html?ref=global&pagewanted=all. 
  17. "Mukesh Ambani on his childhood, youth". Mukesh Ambani on his childhood, youth - Rediff.com Business. Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 5 October 2011.
  18. "'Always invest in businesses of the future and in talent'". Rediff Business - Interview with Mukesh Ambani, 2007. Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 17 October 2011.
  19. "Reliance Industries - Company Profile". Reliance Industries Ltd. - Company Profile, Information, Business Description, History, Background Information on Reliance Industries Ltd. Read more: Reliance Industries Ltd. - Company Profile, Information, Business Description, History, Background Information on Reliance Industries Ltd.- Reference for Business. Advameg Inc. பார்க்கப்பட்ட நாள் 17 October 2011.
  20. "Mukesh Ambani - Executive Profile & Biography". Mukesh Ambani - Executive Profile & Biography - Bloomberg Businessweek. Bloomberg.
  21. Mulgund, Shreyas. "Asia Society Awards Dinner Honors Mukesh Ambani, Jeffrey Immelt, and NY Philharmonic". Press Release on Asia Society. Asia Society. பார்க்கப்பட்ட நாள் 21 September 2011.
  22. Mulgund, Shreyas (30 December'2010). "FC Businessman of the Year: Mukesh Ambani". Financial Chronicle இம் மூலத்தில் இருந்து 2013-07-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130723125841/http://www.mydigitalfc.com/companies/fc-businessman-year-mukesh-ambani-459. பார்த்த நாள்: 21-September' 2011. 
  23. "IMC Juran Quality Medal 2009". List of Winners of IMC Juran Quality Medal. IMC. Archived from the original on 21 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 21 September 2011.
  24. Mulgund, Shreyas. "The MDG Advocacy Group" (PDF). Millennium Development Goals. UN Department of Public Information. பார்க்கப்பட்ட நாள் 21 September 2011.
  25. Kwek, Glenda (15 October 2010). "India's richest man builds first $1-billion home, Antilia,". The Age (Melbourne). http://www.theage.com.au/executive-style/luxury/indias-richest-man-builds-worlds-first-billiondollar-home-20101015-16mrg.html. பார்த்த நாள்: 28 October 2010. 
  26. Mark Magnier (24 October 2010). "Mumbai billionaire's home boasts 27 floors, ocean and slum views". The Los Angeles Times. http://articles.latimes.com/2010/oct/24/world/la-fg-india-rich-20101025. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகேசு_அம்பானி&oldid=3945674" இலிர���ந்து மீள்விக்கப்பட்டது