உள்ளடக்கத்துக்குச் செல்

மரகதமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எம். கீரவாணி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கொடுரி மரகதமணி கீரவாணி
பிற பெயர்கள்மரகதமணி (கோலிவுட்)
எம். எம். கீரம் (பாலிவுட்)
பிறப்பு4 சூலை 1961 (1961-07-04) (அகவை 63)
கொவ்வூர், ஆந்திர பிரதேஷ், இந்தியா
பிறப்பிடம்ஆந்திர பிரதேஷ், இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட இசை, உலக இசை
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர், இசையமைப்பாளர், பாடகர்
இசைத்துறையில்1989–தற்போது

கொடுரி மரகதமணி கீரவாணி, (M. M. Keeravani) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் மரகதமணி என்றும் பிற மொழிகளில் எம். எம். கீரவாணி என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் , மலையாளம், இந்தி உள்ளிட்ட திரைப்படத் துறைகளில் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு மரகதமணி, வீடநாராயணா, எம். எம். கீரம் போன்ற புனைப்பெயர்கள் உள்ளன. இவருடைய பல பாடல்கள் பின்னணிப் பாடகர்களான எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா ஆகியோரால் பாடப்பெற்றது.[1] 1997இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அன்னமாச்சாரியார் திரைப்படத்திற்காக கிடைத்தது. மேல��ம் தமிழக அரசு திரைப்பட விருதுகள், ஆந்திர அரசாங்கம் தருகின்ற நந்தி விருது போன்றவற்றை பெற்றுள்ளார்.[2] இவரது இசையமைப்பில் வெளிவந்த இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர். ஆர். ஆர்.) திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருது, அகாதமி விருது ஆகிய விருதுகளை வென்றது.[3][4]

இவர் தமிழ்த் திரைப்படங்களில் மரகதமணி என்று அழைக்கப்படுகிறார்.

படங்கள்

[தொகு]

இவர் இசையமைத்ததில் மிக முக்கியமான திரைப்படங்கள் 'அழகன்', ' நீ பாதி நான் பாதி' , 'வானமே எல்லை' , 'ஜாதிமல்லி' ஆகியனவாகும். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

விருதுகள்

[தொகு]

கீரவாணி 1997 ஆம் ஆண்டு 'அன்னமய்யா' என்ற படத்திற்கு தேசிய விருது பெற்றார். இவர் ஆந்திராவில் வழங்கப்படும் நந்தி விருதை பலமுறை பெற்றிருக்கிறார். தமிழில் 'அழகன்' திரைப்படத்தின் இசைக்காக 1991 இல் தமிழக அரசின் விருதைப் பெற்றார். இவர் பல்வேறு பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Keeravani presented Rotary Vocational Excellence Award – The Hindu
  2. "The man in demand | Deccan Chronicle". Archived from the original on 2013-02-15. பார்க்கப்பட்ட நாள் 2016-06-09.
  3. "'கோல்டன் குளோப்' விருதை வென்றது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்". www.dinamalar.com. தினமலர். 12 சனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச்சு 2023.
  4. "நாட்டு, நாட்டு என்ற நமது நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது". www.dinamalar.com. தினமலர். 13 மார்ச்சு 2023. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச்சு 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரகதமணி&oldid=4148690" இலிருந்து மீள்விக��கப்பட்டது