கோல்டன் குளோப் விருது
Appearance
கோல்டன் குளோப் விருது | |
---|---|
தற்போதைய: 66வது கோல்டன் குளோப் விருதுகள் | |
கோல்டன் குளோப் விருது | |
விளக்கம் | சிறந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருது |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
வழங்குபவர் | Hollywood Foreign Press Association |
முதலில் வழங்கப்பட்டது | 1944 |
இணையதளம் | http://www.hfpa.org/ |
கோல்டன் குளோப் விருதுகள் (Golden Globe Awards) சிறந்த உள்ளூர் மற்றும் வெளியூர் திரைப்படம், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டு தோறும் வழங்கப்பட்டுவரும் ஒரு விருது ஆகும். இது ஹாலிவுட் வெளிநாட்டு செய்தி நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகிறது[1].
முதலாவது கோல்டன் குளோப் விருது 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 20ஆம் சென்சுரி பாக்ஸ் கலைக்கூடத்தில் இடம்பெற்றன.
விதிகள்
[தொகு]ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஹாலிவுடில் தங்கியிருக்கும் கிட்டத்தட்ட 90 பன்னாட்டு ஊடகவியலாளர்கள் (2008 இல்) இவ்விருதுகளுக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள். இவ்விருதுகளுக்கான தகமைக் காலம் அக்டோபர் 1 இல் ஆரம்பிக்கின்றன.
விருதுகள்
[தொகு]திரைப்பட விருதுகள்
[தொகு]- சிறந்த திரைப்படம் - நாடகத் திரைப்படம்
- சிறந்த திரைப்படம் - இசை அல்லது நகைச்சுவைத் திரைப்படம்
- சிறந்த நடிகர் - நாடகத் திரைப்படம்
- சிறந்த நடிகர் - இசை அல்லது நகைச்சுவை
- சிறந்த நடிகை - நாடகத் திரைப்படம்
- சிறந்த நடிகை - இசை அல்லது நகைச்சுவைத் திரைப்படம்
- சிறந்த துணை நடிகர்
- சிறந்த துணை நடிகை
- சிறந்த அசைவூட்டத் திரைப்படம்
- சிறந்த ஒளிப்பதிவு
- சிறந்த இயக்குநர்
- சிறந்த வேறு மொழி படம்
- சிறந்த அசல் இசை
- சிறந்த அசல் பாடல்
- செசில் டி-மில் வாழ்நாள் சாதனை விருது
தொலைக்காட்சி விருதுகள்
[தொகு]- சிறந்த தொலைக்காட்சித் தொடர் - நாடகத் தொலைக்காட்சித் தொடர்
- சிறந்த தொலைக்காட்சித் தொடர் - நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர்
- சிறந்த தொலைக்காட்சித் குறுந்தொடர்
- சிறந்த நடிகர் - நாடகத் தொலைக்காட்சித் தொடர்
- சிறந்த நடிகர் - நகைச்சுவை தொலைக்காட்சித் தொடர்
- சிறந்த நடிகை - நாடகத் தொலைக்காட்சித் தொடர்
- சிறந்த நடிகை - நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர்
- சிறந்த நடிகர் - தொலைக்காட்சித் குறுந்தொடர்/ திரைப்படம்
- சிறந்த நடிகை - தொலைக்காட்சித் குறுந்தொடர்/ திரைப்படம்
- சிறந்த துணை நடிகர் - நகைச்சுவைத் தொலைக்காட்சி தொடர்/குறுந்தொடர்/திரைப்படம்
- சிறந்த துணை நடிகை - நகைச்சுவைத் தொலைக்காட்சி தொடர்/குறுந்தொடர்/திரைப்படம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About the HFPA". Archived from the original on 2011-11-03. பார்க்கப்பட்ட நாள் 2009-01-14.
வெளி இணைப்புகள்
[தொகு]- Hollywood Foreign Press Association பரணிடப்பட்டது 2013-12-13 at the வந்தவழி இயந்திரம்
- Awards listing பரணிடப்பட்டது 2010-04-11 at the வந்தவழி இயந்திரம் at the Internet Movie Database