பிரபுதேவா
பிரபுதேவா | |
---|---|
ரௌடி ரத்தோர் படத்தின் விளம்பர நிகழச்சியில் பிரபுதேவா, 2012 | |
பிறப்பு | 3 ஏப்ரல் 1973[1][2] மைசூர், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1986–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ரமலத் (தி. 1995–2011) டாக்டர். ஹிமானி சிங் (தி. 2020) |
பிள்ளைகள் | 3 |
உறவினர்கள் | ராஜூ சுந்தரம் (சகோதரர்) நாகேந்திர பிரசாத் (சகோதரர்) |
விருதுகள் | பத்மசிறீ |
பிரபுதேவா (பிறப்பு: 3 ஏப்ரல் 1973) இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். தாயார் பெயர் மகாதேவம்மா. ராஜு சுந்திரம் மற்றும் நாகேந்திர பிரசாந்த் இரு சகோதரன் உண்டு . இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.
நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய இவர் 1989 ஆவது ஆண்டில் வெளியான இந்து திரைப்படத்தில் நடிகை ரோஜாவுடன் இணைந்து நடித்தார். இதுவே இவர் முழுநேர கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குநராகவும் அவதாரம் எடுத்த இவர் போக்கிரி, வில்லு உட்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.உதவி நடன இயக்குநர் தயாபரன்
தேசியவிருது
[தொகு]மின்சாரக் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலமாக சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சென்னையில் பிறந்த [3] பிரபுதேவா ராம்லாத் (லதா) என்ற பெண்ணைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள், ஆனால் மூத்த ஆண் குழந்தை 2008 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக இறந்தது.[4][5] பிரபுதேவா நடிகை நயன்தாராவுடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை அவருடன் சேர்ந்து வாழ விடும் படியும் மனைவி ராம்லாத் வழக்குத் தொடர்ந்தார்.[6] அத்துடன், ராம்லாத் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் அச்சுறுத்தல் விடுத்தார். ராம்லாத்திற்கு ஆதரவாக பெண்கள் அமைப்புகள் பல குரல் கொடுத்தன.[7] 2012 ஆம் ஆண்டில் நயன்தாரா தாம் பிரபுதேவாவிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விட்டதாக அறிவித்தார்.[8][9][10][11] பிரபுதேவா பின்னர் மும்பைக்குக் குடிபெயர்ந்து, பின்னர் சென்னையில் தங்கி பல படங்களில் நடித்துவருகிறார்.[12]
திரையுலகில்
[தொகு]பிரபுதேவா பின்னணி நடன கலைஞராக அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் ஆடியிருந்தாலும், முரளி நடித்த இதயம் திரைப்படத்தின் ஏப்ரல் மேயிலே பாடலிலேயே முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார். இந்த பாடல் நல்ல புகழ்பெற்றாலும் அதன்பின்னர் ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இவரது சிறந்த நடனம் இவரை முன்னுக்கு அனுப்பியது. அப்படத்தின் சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே பாடலிற்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களைப் பைத்தியமாக்கியது. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலிற்குப் பின்னணியில் ராஜூ சுந்தரத்துடன் நடனமாடினார். இத்திரைப்படத்திற்கு இவரது தந்தையே நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து ஷங்கரின் இயக்கத்தில் உருவான காதலன் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இது தமிழில் மட்டும் அன்றி பிறமொழிகளில் வெளியான இதன் மொழிபெயர்ப்புகளும் வெற்றியடைந்தன. இவர் பலபடங்களில் நடித்தபோதும் இவரது நடிப்புத்திறமை ஏழையின் சிரிப்பிலே திரைப்படத்திலேயே வெளிக்காட்டப்பட்டது. இப்படத்திலே இவர் ஓர் பேருந்துகூலி வேலையாளாக நடித்தார். மும்பை: டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் பிரபுதேவா என்று ஏபிசிடி 2 இந்தி படத்தின் ஹீரோ வருண் தவான் தெரிவித்துள்ளார். ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா, சல்மான் யூசுப் கான் உள்ளிட்டோர் நடித்த ஏபிசிடி படம் சூப்பர் ஹிட்டானது. முழுக்க முழுக்க டான்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஏபிசிடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதையடுத்து ரெமோ ஏபிசிடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.
நடித்த சில திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி |
---|---|---|---|
1988 | அக்னி நட்சத்திரம் | "ராஜா ராஜாதி" பாடலில் நடனமாடும் குழுவில் ஒருவராக | தமிழ் |
1991 | இதயம் | ஏப்ரல் மேயிலே பாடலில் நடனமாடும் குழுவில் ஒருவராக | தமிழ் |
1992 | உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் | உட்டா லங்கடி பாடலில் நடனமாடும் குழுவில் ஒருவராக | தமிழ் |
1992 | சூரியன் | "லாலக்கு டோல் டப்பிமா" பாடலுக்கு நடனம் ஆடுபவர்களில் முதன்மையானவராக | தமிழ் |
1993 | பிரதாப் | "மாங்கா மாங்கா" பாடலுக்கு நடனம் ஆடுபவர்களில் முதன்மையானவராக | தமிழ் |
1993 | ரக்சனா | "கல்லு மந்தி பாசு" பாடலுக்கு நடனம் ஆடுபவர்களில் முதன்மையானவராக | தெலுங்கு |
1993 | ஜென்டில்மேன் | "சிக்குபுக்கு ரயிலு" பாடலுக்கு நடனம் ஆடுபவர்களில் முதன்மையானவராக | தமிழ் |
1993 | வால்டர் வெற்றிவேல் | "சின்ன ராசாவே" பாடலுக்கு நடனம் ஆடுபவர்களில் முதன்மையானவராக | தமிழ் |
1994 | இந்து | பட்டாசு | தமிழ் |
1994 | காதலன் | பிரபு | தமிழ் |
1995 | ராசய்யா | ராசய்யா | தமிழ் |
1996 | லவ் பேர்ட்ஸ் | அருண் | தமிழ் |
1996 | மிஸ்டர். ரோமியோ | ரோமியோ மெட்ராஸ் |
தமிழ் |
1997 | மின்சார கனவு | தேவா | தமிழ் |
1997 | வி. ஐ. பி. | குரு | தமிழ் |
1998 | நாம் இருவர் நமக்கு இருவர் | பிரபு தேவா |
தமிழ் |
1998 | லவ் ஸ்டோரி | வம்சி | தெலுங்கு |
1998 | காதலா காதலா | சுந்தரலிங்கம் | தமிழ் |
1999 | நினைவிருக்கும் வரை | ஜானகிராமன் (ஜானி) | தமிழ் |
1999 | சுயம்வரம் | கண்ணா "சிவ சிவசங்கரா" பாடலில் பாடகராகவும் |
தமிழ் |
1999 | டைம் | சீனிவாச மூர்த்தி | தமிழ் |
2000 | வானத்தைப் போல | செல்வக் குமார் | தமிழ் |
2000 | ஏழையின் சிரிப்பில் | கணேசன் | தமிழ் |
2000 | புகார் | சிறப்புத் தோற்றம் | இந்தி |
2000 | ஜேம்ஸ்பாண்ட் | ஜேம்ஸ் | தமிழ் |
2000 | பெண்ணின் மனதை தொட்டு | சுனில் | தமிழ் |
2000 | டபுள்ஸ் | பிரபு | தமிழ் |
2001 | உள்ளம் கொள்ளை போகுதே | அன்பு | தமிழ் |
இயக்குநராக
[தொகு]ஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | மொழி |
---|---|---|---|
2005 | நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா | சித்தார்த், திரிஷா | தெலுங்கு |
2006 | பௌர்ணமி | பிரபாஸ், திரிஷா | தெலுங்கு |
2007 | போக்கிரி | விஜய், அசின் | தமிழ் |
சங்கர்தாதா சிந்தாபாத் | சிரஞ்சீவி, கிரிஸ்மா கோடாக் | தெலுங்கு | |
2009 | வில்லு | விஜய், நயன்தாரா | தமிழ் |
வான்டட் | சல்மான் கான், ஆயிசா | இந்தி | |
2011 | எங்கேயும் காதல் | ஜெயம் ரவி, ஹன்சிகா | தமிழ் |
வெடி | விஷால், சமீரா ரெட்டி | தமிழ் | |
2012 | ரவ்டி ரதோர் | அக்சய் குமார், சோனாக்சி சின்கா | இந்தி |
2013 | ராமையா வஸ்தாவையா | கிரிஷ் குமார், சுருதிகாசன் | இந்தி |
ஆர்... ராஜ்குமார் | சாகித் கபூர், சோனாக்சி சின்கா | இந்தி | |
2014 | ஆக்சன் ஜாக்சன் | அஜய் தேவ்கன், சோனாக்சி சின்கா | இந்தி |
நடனமாடுபவராக
[தொகு]- இதயம்
- வால்டர் வெற்றிவேல்
- பாபா (திரைப்படம்)
- சூரியன் (தமிழ்)
- ஜெண்டில்மேன் (தமிழ்)
- லக்ஷ்ய (ஹிந்தி)
- புகார் (ஹிந்தி)
- ஸக்தி: தி பவர் (ஹிந்தி)
- நுவ்வஸ்தானண்டே நேனொத்தண்டானா (தெலுங்கு)
- அக்னி நட்சத்திரம்
விருதுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "On Prabhu Deva's 44th birthday, a recap of his catchy dance numbers". 3 April 2017. Archived from the original on 11 December 2017. பார்க்கப்பட்ட நாள் 11 December 2017.
- ↑ Rose Telugu Movies (26 September 2016). "Prabhu Deva About His Age - Funny Comments - Abhinetri Interview - Tamanna". Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 5 December 2016 – via YouTube.
- ↑ நான் 2 - நண்பனே இல்லாதவன்டா! தி இந்து தமிழ் 19 நவம்பர் 2015
- ↑ Prabhudeva's little son passes away!. Sify.com (4 December 2008)
- ↑ Ramlath demands immediate arrest of Nayantara! பரணிடப்பட்டது 2012-07-07 at Archive.today. Entertainment.oneindia.in (23 September 2009). Retrieved on 27 September 2013.
- ↑ "Prabhu's wife files for second petition". The Times Of India. 7 October 2010 இம் மூலத்தில் இருந்து 2012-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104013850/http://articles.timesofindia.indiatimes.com/2010-10-07/news-interviews/28249293_1_nayanthara-prabhu-deva-latha.
- ↑ "Nayanthara – Tamil Movie News – Nayanthara's effigy burnt – Nayanthara | Prabhu Dheva | Ramlath | Kalpana". Behindwoods.com. 6 October 2010. பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
- ↑ "Nayanthara, Prabhu Dheva call it quits". The Times Of India. 28 January 2012 இம் மூலத்தில் இருந்து 2012-04-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120409203807/http://articles.timesofindia.indiatimes.com/2012-01-28/news-interviews/30673544_1_prabhu-deva-prabhu-and-nayan-source.
- ↑ "Prabhu Deva enters into divorce deal with wife". The Times Of India. 29 December 2010 இம் மூலத்தில் இருந்து 2012-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120606143713/http://articles.timesofindia.indiatimes.com/2010-12-29/india/28237143_1_actor-prabhu-deva-latha-restitution-of-conjugal-rights.
- ↑ "Prabhu Deva granted divorce". சிஃபி. 2 July 2011 இம் மூலத்தில் இருந்து 5 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110705120914/http://www.sify.com/movies/prabhu-deva-granted-divorce-news-tamil-lhcucBcjchd.html. பார்த்த நாள்: 2 July 2011.
- ↑ "Nayanthara, Prabhu Deva call it quits". The Times Of India. 28 January 2012 இம் மூலத்தில் இருந்து 2012-04-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120409203807/http://articles.timesofindia.indiatimes.com/2012-01-28/news-interviews/30673544_1_prabhu-deva-prabhu-and-nayan-source.
- ↑ "Shruti Haasan bags Prabhu Dheva’s next film". The Times Of India. 9 July 2012 இம் மூலத்தில் இருந்து 2013-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130709102254/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-09/news-interviews/32589117_1_shruti-haasan-prabhu-dheva-rowdy-rathore.
- ↑ "மத்திய அரசின் பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன : 112 பேருக்கு பத்ம விருதுகள்". தந்தி தொலைக்காட்சி. 26 சனவரி 2019. Archived from the original on 2021-01-17. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2019.