உள்ளடக்கத்துக்குச் செல்

மணி கிருஷ்ணசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணி கிருஷ்ணசுவாமி
பிறப்புமணி பெருந்தேவி
(1930-02-03)பெப்ரவரி 3, 1930
இறப்புசூலை 12, 2002(2002-07-12) (அகவை 72)
பணிவாய்ப்பாட்டு இசைக்கலைஞர்
பெற்றோர்லக்‌சுமிநரசிம்மாச்சாரி, மரகதவல்லி
வாழ்க்கைத்
துணை
எம். கிருஷ்ணசாமி

மணி கிருஷ்ணசுவாமி (பெப்ரவரி 3, 1930 - சூலை 12, 2002) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக வாய்ப்பாட்டு இசைக்கலைஞர் ஆவார்.

குடும்பம்

[தொகு]

1930 ஆம் ஆண்டு பெப்புருவரி 3ந் திகதி பிறந்த இவரது இயற்பெயர் மணி பெருந்தேவி என்பதாகும். இவரது தந்தையார் வேலூர் சங்கீத சபாவின் செயலாளராக இருந்த லக்‌சுமிநரசிம்மாச்சாரி ஆவார். மணி கிருஷ்ணசாமி ஆறு வயதாக இருந்தபோது அவரின் தாயார் மரகதவல்லி அவருக்கு வயலின் கற்றுக்கொடுத்தார். இவரின் கணவர் எம். கிருஷ்ணசாமி கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவராக பணியாற்றினார்.

இசைப் பயிற்சி

[தொகு]

இவரது இசைப் பயிற்சிக்கு முதல் ஆசானாக சங்கீத வித்துவானும் குடும்ப நண்பருமான கோபாலாச்சாரி அமைந்தார். தனது சிறு வயதிலேயே 500 பாடல்களுக்கு மேல் கற்றுக்கொண்டார். மேல்நிலைப்பள்ளி படிப்பு முடிந்ததும் சென்னை கலாசேத்திராவில் சங்கீத சிரோமணி வகுப்பில் சேர்ந்தார். இங்கே அவர் ருக்மணிதேவி, "டைகர்" வரதாச்சாரி, பாபநாசம் சிவன் போன்றோரின் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்டார். சங்கீத கலாநிதி விருது பெற்ற மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, முசிரி சுப்பிரமணிய ஐயர், "டைகர்" வரதாச்சாரியார், பாபநாசம் சிவன் ஆகிய ஐந்து வித்துவான்களிடம் இவர் இசை பயின்றது ஒரு சிறப்பு அம்சமாகும். முசிரி சுப்பிரமணிய ஐயரின் பாணியையே இவர் பின்பற்றி பாடி வந்தார்.

இசைப் பயணம்

[தொகு]

1989 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திலும் 1991 ஆம் ஆண்டு செருமனியிலும் நடந்த இந்திய விழாக்களில் இசைக்கச்சேரி செய்ய இவரை அந்தந்த நாடுகளுக்கு இந்திய அரசு அனுப்பியது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் இவரை ஆஸ்தான வித்துவானாக நியமித்திருந்தது.

இசை வல்லுனரான டாக்டர் வி.வி. ஸ்ரீவத்சாவா இவரைப் பற்றிக் கூறுகையில் "முசிரி பாணியின் பிரதிநிதியான மணி கிருஷ்ணசுவாமியின் பலம் நிரவல், பல்லவி, ஒப்படைப்பு என்பவற்றில் இருந்தது" என்று குறிப்பிட்டார். வித்துவான் மதுரை என். கிருஷ்ணன் கூறுகையில் "இசை சுருதி சுத்தம், சாகித்திய சுத்தம், காலப்பிரமாணம் என்பன அவரது இசையின் சிறப்பம்சம்" என்றார். இவர் பாடிய சௌந்தரியலகரி இசைப்பிரியர்கள் போற்றும் ஒரு இசைப் பெட்டகமாகும். முசிரி சுப்பிரமணிய ஐயர் நூற்றாண்டு விழாவின்போது கலாக்ஷேத்திராவில் உடன் கற்ற சுகுணா புருசோத்தமன், சுகுணா வரதாச்சாரி ஆகியோருடன் சேர்ந்து முசிரி இசை பாரம்பரியத்தின் மேலான அம்சங்களை பரவச்செய்தார்.

விருதுகள்

[தொகு]

மறைவு

[தொகு]

2002 ஆம் ஆண்டு சூலை 12 வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018. 

வெளி இணைப்புகள்

[தொகு]

SHRIMATI MANI KRISHNASWAMI - A Profile

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணி_கிருஷ்ணசுவாமி&oldid=3253078" இலிருந்து மீள்விக்கப்பட்டது