தமிழ் ஒலிக்குறிப்பு
தமிழ் ஒலிக்குறிப்பு (Tamil Onomatopoeia) என்பது ஒலியியல் ஒத்த தன்மை அல்லது ஒத்திருக்கும் தமிழ் மொழியில் உள்ள சொற்களைக் குறிக்கிறது. தமிழ் ஒலிக்குறிப்புக்கள் தொல்காப்பியம் நூலில் காணப்படுகிறது. இது தமிழ் மொழியில் செய்யுளிலும் வழக்கிலும் பயன்படுகிறது.
வகைகள்
[தொகு]இரட்டைக்கிளவி, அடுக்குத் தொடர் ஆகிய இரு ஒலிக்குறிப்பு வகைள் காணப்படுகின்றன.
இரட்டைக்கிளவி
[தொகு]இரட்டைக்கிளவியில் இரண்டு சொற்கள் சேர்ந்து, ஒரு தன்மைப் பட்டு நின்று, பிரித்தால் பொருள் தராது காணப்படும். இரண்டாம் தொல்காப்பிய நூலின் முதலாம் அதிகாரமாகிய கிளவியாக்கம் பின்வருமாறு இதனை விபரிக்கிறது:[1]
"இரட்டைக் கிளவி இரட்டின் பிரித்து இகைய."
இரட்டைக் கிளவி மூன்று வகையாகப் வகுக்கப்பட்டுள்ளது. முதலாவது, பெயரெச்ச தரமுள்ள ஒரு சொல் திரும்பவும் வரும். இரண்டாவது, சொல் பெயரளவில் அல்லது வினையாக வரும். மூன்றாவது, எதிர் எதிர் அர்த்தம் கொண்ட சொற்கள் சேர்ந்திருக்கும்.[2]
அடுக்குத் தொடர்
[தொகு]அடுக்குத் தொடரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து, தனித்தனி சொல்லாக, பிரித்தாலும் பொருள் தந்து காணப்படும்.[3]
இரட்டைக்கிளவி, அடுக்குத் தொடர் ஒப்பீடு
[தொகு]இரட்டைக்கிளவி | அடுக்குத் தொடர் |
---|---|
இரண்டு சொற்கள் சேர்ந்து வரும் எ.கா: துறுதுறு என்ற விழிகள் |
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் வரும் எ.கா: பிடி பிடி பிடி |
பிரித்தால் பொருள் தராது எ.கா: துறுதுறு |
பிரித்தாலும் பொருள் தரும் எ.கா: பிடி பிடி பிடி |
உசாத்துணை
[தொகு]- ↑ Hons, Pavel (2004). Reduplicative construction in Tamil (Ph.D.). பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
- ↑ V.S., Rajaram (1992). A Reference Grammar of Classical Tamil Poetry (150 B.C.--pre-fifth/sixth Century A.D.). American Philosophical Society. p. 1089. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87169-199-6.
Classical Tamil uses stems in a certain repetitive fashion
- ↑ பவணந்திமுனிவர் (2007). நன்னூல் - புதிய அணுகுமுறையில். சென்னை: சாரதா பதிப்பகம். pp. 301–302.
அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒரு சொல் இரண்டு மூன்று நான்கு எல்லைமுறை அடுக்கும்
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)