உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் ஜூஸ்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான் மார்செலஸ் ஜூஸ்தன் (John Marcellus Huston (/ˈhjuːstən/;ஆகஸ்ட் 5, 1906   - ஆகஸ்ட் 28, 1987) ஓர் அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் மற்றும் காட்சி கலைஞர் ஆவார். ஜூஸ்தன் பிறப்பால் அமெரிக்காவின் குடிமகனாக இருந்தார். ஆனால், அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு ஐரிஷ் குடியுரிமை பெற்று அங்கு வசித்தார்.பின்னர் இவர் அமெரிக்காவுக்குத் திரும்பி அங்கு அவர் தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். [1] இவர் இயக்கிய 37 திரைப்படங்களில் பெரும்பாலானவற்றிற்கான திரைக்கதைகளை இவரே எழுதினார், அவற்றில் பல இன்று சிறப்பானவைகளாக கருதப்படுகின்றன: தி மால்டிஸ் பால்கன் (1941), தி டிரசரி ஆஃப் சியரா மேட்ரே (1948), தி அஸ்பால்ட் ஜங்கிள் (1950), தி ஆப்ரிகன் குயீன் ( 1951), தி மிஸ்ஃபிட்ஸ் (1961), ஃபேட் சிட்டி (1972), தி மேன் ஹூ வுல்ட் பி கிங் (1975) மற்றும் பிரிஸி'ஸ் ஹானர் (1986). இவரது 46 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில், இவர் 15 முறை ஆஸ்கார் பரிந்துரைகளைப் பெற்றார். அதில் இரண்டு முறை வென்றார். மேலும் இவரது தந்தை வால்டர் ஹஸ்டன் மற்றும் மகள் அஞ்சலிகா ஹஸ்டன் இருவரையும் இயக்கினார். அவர்களும் ஆஸ்கார் விருதினை வென்றனர்.

ஜூஸ்தன் தனது ஆரம்ப ஆண்டுகளில் பாரிஸில் ஒரு கலைப் பிரிவினைப் படித்து அங்கேயே பணியாற்றினார். அவர் தனது வாழ்க்கை முழுவதும் தனது படங்களின் காட்சி அம்சங்களை காகிதத்தில் முன்பே வரைந்து வைத்துக் கொண்டார். பின்னர் படப்பிடிப்பின் போது தனது கதாபாத்திரங்களை கவனமாக வடிவமைத்தார். பெரும்பாலான இயக்குநர்கள் படப்பிடிப்பிடிப்பு முடிந்து பதிப்பிக்கும் பணியின் போது படத்திற்கான இறுதி வேலைகளில் ஈடுபடுவர். இவர் அதற்கு பதிலாக அவரது படங்களை படமாக்கும்போது பதிப்பிக்கும் பணிகளை மேற்கொள்வார்.பின்னர் சிறு வேலைகள் மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்வார்.

ஜூஸ்தனின் சில திரைப்படங்கள் முக்கியமான புதினங்களின் தழுவல்களாக இருந்தன. இ���ரது பல படங்களில் மதம், பொருள், உண்மை, சுதந்திரம், உளவியல், காலனித்துவம் மற்றும் போர் ஆகியன கருப்பொருள்களாக இருந்தன.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஜான் ஜூஸ்தன் ஆகஸ்ட் 5, 1906 அன்று மிசோரியின் நெவாடாவில் பிறந்தார். ரியா (நீ கோர்) மற்றும் கனடாவில் பிறந்த வால்டர் ஜூஸ்தன் ஆகியோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு நடிகராக இருந்தார், . அவரது தாயார் ஆரம்பத்தில் இதழில் விளையாட்டு பிரிவிற்கு பதிப்பாசிரியராக இருந்தார். ஆனால் ஜான் பிறந்த பிறகு அந்தப் பணியினை விட்டுவிட்டார். இதேபோல், அவரது தந்தை ஒரு குடிசார் பொறியாளராக பனிபுரிவதற்காக தனது மேடை நடிப்பு வாழ்க்கையை கைவிட்டார். இருப்பினும், அவர் சில ஆண்டுகளில் மேடை நடிப்புக்கு திரும்பினார். பின்னர் அவர் பிராடுவே நாடக அரங்கு மற்றும் அசைவுப் படங்களில் மிகவும் வெற்றிகரமான நடிகராக ஆனார்.

திரைப்பட வரலாறு

[தொகு]

தி மால்டிஸ் பால்கன் (1941), தி டிரசரி ஆஃப் சியரா மேட்ரே (1948), தி அஸ்பால்ட் ஜங்கிள் (1950), தி ஆப்ரிகன் குயீன் ( 1951), தி மிஸ்ஃபிட்ஸ் (1961), ஃபேட் சிட்டி (1972), தி மேன் ஹூ வுல்ட் பி கிங் (1975) மற்றும் பிரிஸி'ஸ் ஹானர் (1986) ஆகியன இவர் இயக்கியவற்றில் குறிப்பிடத் தகுந்தன ஆகும்.

சான்றுகள்

[தொகு]
  1. "John Huston Becomes Irish Citizen". RTÉ Archives.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஜூஸ்தன்&oldid=2912681" இலிருந்து மீள்விக்கப்பட்டது