செவ்வாய் (கிழமை)
Appearance
(செவ்வாய்க் கிழமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செவ்வாய்க்கிழமை (Tuesday) என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள் ஆகும். திங்கட்கிழமைக்கும் புதன்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும். இந்துக் காலக்கணிப்பின்படி செவ்வாய் என்னும் கோளுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.[1][2][3]
ஆங்கிலத்தில் இந்நாளின் பெயர் Twisday அல்லது Tiwes dæg, அதாவது ரோமன் கடவுளான செவ்வாய்க்கு இணையான Tyr என்னும் நோர்டிக் கடவுளின் பெயரடியில் இருந்து பெறப்பட்டது. இது இலத்தீன் மொழியில் இந்நாள் Martis dies, அதாவது செவ்வாய் நாள். ஜேர்மன் மொழியில் Dienstag, மற்றும் டச்சு மொழியில் Dinsdag. ரஷ்ய மொழியில் ஃப்தோர்னிக் (இரண்டாவது), அ-வது வாரத��தின் இரண்டாவது நாளைக் குறிக்கும் சொல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ISO 8601-1:2019(en) Date and time — Representations for information interchange — Part 1: Basic rules". www.iso.org. பார்க்கப்பட்ட நாள் 2024-05-14.
- ↑ "Tuesday"..
- ↑ Klein, E., "deity" and "Tuesday", Comprehensive Etymological Dictionary of the English Language (Elsevier Publishing, 1966), pp. 417—18, 1662.
கிழமை நாட்கள் |
---|
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி |