சென்னசமுத்திரம், திருவண்ணாமலை மாவட்டம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சென்னசமுத்திரம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட செங்கம் வட்டத்தில் உள்ளது. இது திருவண்ணாமலையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாது மலைத்தொடரின் அடிவார கிராமம் சென்னசமுத்திரம். கிராமத்தின் ஒரு பகுதி வயல்வெளிகளாலும் மறுபகுதி ஏரியாலும், காடுகளாலும் சூழப்பட்டுள்ளது.
இந்திய அரசின் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சென்னசமுத்திரம் கிராமத்தின் விவரம்
நிலப்பரப்பு: 615.02 ஹெக்டர்
மக்கள்தொகை: 3134
மொத்த வீடுகளின் எண்ணிக்கை: 700
செங்கத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த கிராமம் 2 மணி நேர இடைவெளியில் செங்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
உலக பிரசித்திப்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலின் வடக்கு கோபுரத்தை கட்டிய அம்மணி அம்மாள் பிறந்த ஊர் இந்த சென்னசமுத்திரம்.