இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931
| ||
இலங்கை அரசாங்க சபைக்கு 50 உறுப்பினர்கள் பெரும்பான்மைக்கு 26 இடங்கள் தேவை. | ||
---|---|---|
|
இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் 1931 ஆம் ஆண்டு சூன் 13 முதல் சூன் 20 வரை இடம்பெற்றது[1]. பிரித்தானியக் குடியேற்ற நாடு ஒன்றில் இடம்பெற்ற வயது வந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்ட முதலாவது தேர்தல் முறையாகும்.[2]
பின்னணி
[தொகு]1931 இல் டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு முன்னர் இருந்து வந்த இலங்கை சட்டசபைக்குப் பதிலாக இலங்கை அரச சபை உருவாக்கப்பட்டது. 58 உறுப்பினர்களில் 50 பேர் பொதுமக்களாலும், 8 பேர் பிரித்தானிய ஆளுநரினாலும் நியமிக்கப்பட்டனர்.
பழைய சட்டசபை 1931 ஏப்ரல் 17இல் கலைக்கப்பட்டு, புதிய அரசாங்க சபைக்கான மனுக்கள் 1931 மே 4 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது[3]. டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு மேலாட்சி (டொமினியன்) அந்தஸ்து வழங்காத காரணத்தால் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கோரியது[3]. இதனையடுத்து இலங்கையின் வட மாகாணத்தில் நான்கு தொகுதிகளில் (யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை) தேர்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை[3]. அத்துடன், ஒன்பது தொகுதிகளில் உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்தெடுக்கப்பட்டனர்[3]. ஏனைய 37 தொகுதிகளுக்கும் தேர்தல்கள் 1931 சூன் 13 முதல் 20 வரை இடம்பெற்றன. வட மாகாணத்துக்கான இடைத்தேர்தல்கள் 1934 இல் இடம்பெற்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சிலர்::
- அநுராதபுரம் - எச். ஆர். ஃபிரீமன், 8,311 வாக்குகள்.[4]
- அவிசாவளை - பொரெஸ்டர் ஆகுஸ்டஸ் ஒபயசேகர, 7,424 வாக்குகள்.[4]
- பதுளை - டி. எச். கொத்தலாவலை.[4]
- பண்டாரவளை - ஏ. ஃபெலோஸ் கோர்டன், 9,097 வாக்குகள்[4]
- மட்டக்களப்பு தெற்கு - முகம்மது மாக்கான் மாக்கார்[5]
- மட்டக்களப்பு-திருகோணமலை - எம். எம். சுப்பிரமணியம்[3]
- பிபிலே - ஜி. சி. ரம்புக்பொத்த, போட்டியின்றித் தெரிவானார்[4]
- கொழும்பு மத்தி - ஏ. ஈ. குணசிங்க, இலங்கை தொழில் கட்சி, (டி. பி. ஜாயாவை வென்றார்)[3]
- கொழும்பு வடக்கு - சேர் இரத்தினசோதி சரவணமுத்து[5]
- கொழும்பு தெற்கு - எஸ். டபிள்யூ. தசநாயக்க, இலங்கை தொழில் கட்சி[6]
- காலி - சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா.[7]
- அம்பாந்தோட்டை - வி. எஸ். டி எஸ். விக்கிரமநாயக்க, 15,384 வாக்குகள்[8]
- அட்டன் - பெரி. சுந்தரம், போட்டியின்றித் தெரிவு[9]
- ஹொரண - ஈ. டபிள்யூ. பெரேரா[10]
- களனி - டொன் பாரன் ஜெயதிலக்க, போட்டியின்றித் தெரிவு[11]
- குருணாகலை - ஜோன் கொத்தலாவலை[12]
- மன்னார்-முல்லைத்தீவு - முதலியார் ஆனந்தம் சீமான்பிள்ளை, (ஜி. ஜி. பொன்னம்பலத்தை வென்றார்[3][5]
- மினுவாங்கொடை - டி. எஸ். சேனநாயக்கா, போடியின்றித் தெரிவு[13]
- மொரவக்கை - எஸ். ஏ. விக்கிரமசிங்க[14]
- ருவான்வெலை - ஏட்லின் மொலமூர், போட்டியில்லை[14]
- தலவாக்கலை - எஸ். பி. வைத்திலிங்கம்[3]
- வெயாங்கொடை - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, போட்டியில்லை.[15]
1931 சூன் 26 இல் ஆளுனர் எட்வர்ட் பார்ன்ஸ் மேலும் 8 பேரை அரசாங்க சபைக்கு நியமித்தார்[3].
இடைத்தேர்தல்கள்
[தொகு]வட மாகாணத்தின் 4 தொகுதிகளுக்கு 1934 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன[5]. பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:
- யாழ்ப்பாணம் - அருணாசலம் மகாதேவா[5]
- காங்கேசன்துறை - சுப்பையா நடேசன்[5]
- ஊர்காவற்துறை - நெவின்ஸ் செல்வதுரை[5]
- பருத்தித்துறை - ஜி. ஜி. பொன்னம்பலம்[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dates of Elections". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ A. Jeyaratnam Wilson. Electoral politics in an emergent state: the Ceylon general election of May 1970. Cambridge University Press. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781001327129.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 K T Rajasingham (22 September 2001). "Chapter 7: State Councils - elections and boycotts". SRI LANKA: THE UNTOLD STORY. Asia Times. Archived from the original on 24 ஜூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 M. Sarath K. Munasinghe (31 March 2004). "Political clergymen of the past". The Island, Sri Lanka. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 T.D.S.A.Dissanayake. "Chapter 1: Was early universal franchise a disaster?". War or Peace... Sangam. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
- ↑ Ananda E. Goonesinha (22 April 2004). "Traversed new paths making History". Sunday Island, Sri Lanka. Archived from the original on 17 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "C.W.W. Kannangara: Father of free education". Daily News, Sri Lanka. 24 September 2003 இம் மூலத்தில் இருந்து 22 ஜனவரி 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050122134851/http://www.dailynews.lk/2003/09/24/fea09.html. பார்த்த நாள்: 6 February 2010.
- ↑ Wijesinghe, Sam (25 December 2005). "People and State Power". Sunday Observer, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 5 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605111144/http://www.sundayobserver.lk/2005/12/25/fea104.html. பார்த்த நாள்: 6 February 2010.
- ↑ K T Rajasingham (29 September 2001). "Chapter 8: Pan Sinhalese board of ministers - A Sinhalese ploy". SRI LANKA: THE UNTOLD STORY. Asia Times. Archived from the original on 24 டிசம்பர் 2001. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Vital document hidden in a shoe". Sunday Times (Sri Lanka). 25 January 2004. http://sundaytimes.lk/040125/funday/2.html. பார்த்த நாள்: 6 February 2010.
- ↑ Jayaweera, Stanley (18 July 2001). "Sir Don Baron Jayatilaka — a great legacy". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 12 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150912201502/http://www.island.lk/2001/07/18/midwee08.html. பார்த்த நாள்: 6 February 2010.
- ↑ Fernando, Shemal. "Sir John Lionel Kotelawala". Lanka Library. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
- ↑ L. M. Samarasinghe (14 November 2002). "Book on "Agriculture and patriotism"". Daily News, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 4 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604054458/http://www.dailynews.lk/2002/11/14/fea11.html. பார்த்த நாள்: 6 February 2010.
- ↑ 14.0 14.1 Wijenayake, Walter (20 December 2008). "Lanka Sama Samaja Party, 73 not out". The Island, Sri Lanka. Archived from the original on 30 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
- ↑ Wijenayake, Walter (26 September 2008). "S. W. R. D. Bandaranaike- trail-blazing leader". The Island, Sri Lanka. Archived from the original on 26 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)