உள்ளடக்கத்துக்குச் செல்

இதர் இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1257–1948
கொடி of இதர் இராச்சியம்
கொடி
of இதர் இராச்சியம்
சின்னம்
தலைநகரம்இதர்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
1257
• 
இந்திய விடுதலை,1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
1948
பின்னையது
}
Republic of India
இதர் இராச்சிய மகாராஜா பிரதாப் சிங்

இதர் இராச்சியம் (Idar State), இது இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் காந்திநகர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் இதர் நகரம் ஆகும். 1875-ஆம் ஆண்டில் இதர் இராச்சியம் £60,000 வருவாயும், பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்களுக்கு £3,034 திறையும் செலுத்தினர். மக்கள் தொகை 2,17,382 கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்கள் இராஜபுத்திர குலத்தின் ஜோத்தா வம்சத்தினர் ஆவார். இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியா, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்க மரியாதை வழங்கினர்.[1]

வரலாறு

[தொகு]

மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த இதர் இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற இதர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.

இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் மகி கந்தா முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இதர் இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இதர் இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதர்_இராச்சியம்&oldid=3371759" இலிருந்து மீள��விக்கப்பட்டது