பரத்பூர் சமஸ்தானம்
பரத்பூர் இராச்சியம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1755–1949 | |||||||||
தலைநகரம் | பரத்பூர் | ||||||||
பேசப்படும் மொழிகள் | பிராஜ் பாஷா இந்தி | ||||||||
அரசாங்கம் |
| ||||||||
மகாராஜா | |||||||||
• 1722–1756 (முதல்) | பதான் சிங் | ||||||||
• 1929–1947 (இறுதி) | பிரிஜேந்திர சிங் | ||||||||
வரலாற்று சகாப்தம் | மத்தியகால இநதியா | ||||||||
• தொடக்கம் | 1755 | ||||||||
• 6 ஏப்ரல் 1949 | 6 ஏப்ரல் 1949 | ||||||||
பரப்பு | |||||||||
1931 | 5,123 [[சதுர[convert: unknown unit] | ||||||||
மக்கள் தொகை | |||||||||
• 1931 | 486,954 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இராஜஸ்தான் இந்தியா |
பரத்பூர் இராச்சியம் அல்லது பரத்பூர் சுதேச சமஸ்தானம் (Bharatpur State), இந்தியா]]வின் மேற்கில் அமைந்த தற்போதைய இராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த பழைய பரத்பூர் மாவட்டத்தின் நிலப்பரப்புகளை கொண்டது. ஜாட் இனத்தைச் சேர்ந்த பதான் சிங் என்பவர் பரத்பூர் இராச்சியத்தை 1755-ஆம் ஆண்டில் நிறுவினார். மன்னர் சூரஜ் மால் ஆட்சியின் (1755–1763) போது பரத்பூர் இராச்சியத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 17,500,000 ஆக இருந்தது.[1] பரத்பூர் இராச்சியத்தின் மொத்தப் பரப்பளவு 5,123 சதுர மைல் ஆகும். 1931-இல் இதன் மக்கள் தொகை 4,86,954 அக இருந்தது.
வரலாறு
[தொகு]1755-ஆம் ஆண்டில் முகலயாப் பேரரசின் படைகளுக்கு எதிராக ஜாட் இன மக்கள் தலைவர் பதான் சிங் தலைமையில் தில்லி, ஆக்ரா மற்றும் மதுரா பகுதிகளில் நடைபெற்ற கிளர்ச்சிகள் மூலம் பரத்பூர் இராச்சியம் 1755-இல் நிறுவப்பட்டது. [2]
1895-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியா அரசு கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பரத்பூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [3][4][5] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்க
[தொகு]- சுதேச சமஸ்தானம்
- துணைப்படைத் திட்டம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- திவான்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sen, Sailendra Nath (2010). An Advanced History of Modern India. Macmillan. p. 420. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-32885-3.
- ↑ Chandra, Satish (1990). Medieval India. India: National Council for Educational Research and Training. pp. Chapter 18 p. 295, 296.
- ↑ [WorldStatesmen - India Princely States K-Z
- ↑ http://www.thefreedictionary.com/Princely+state
- ↑ http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277
குறிப்புகள்
[தொகு]- Imperial Gazetteer of India Vol 8, P-73 Bharatpur State
- R. C. Majumdar, H.C. Raychaudhury, Kalikaranjan Datta: An Advanced History of India, fourth edition, 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-90298-X, p. 535-36
வெளி இணைப்புகள்
[தொகு]- Bharatpur State at Britannica
- பொதுவகத்தில் பரத்பூர் சமஸ்தானம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.