உள்ளடக்கத்துக்குச் செல்

அயகம

ஆள்கூறுகள்: 6°38′26.16″N 80°18′34.92″E / 6.6406000°N 80.3097000°E / 6.6406000; 80.3097000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயகம

அயகம
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - இரத்தினபுரி
அமைவிடம் 6°38′26″N 80°18′35″E / 6.6406°N 80.3097°E / 6.6406; 80.3097
பரப்பளவு
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்
308.1  ச.கி.மீ

 - 283 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
 - மக்களடர்த்தி
28491

 - 92.5/ச.கி.மீ

அயகம இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.[1] அயகம என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயரும் இப்பகுதியின் உதவி அரசாங்க அதிபர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும்

[தொகு]

அயகம சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 283 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

[தொகு]

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பான்மையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 28491 24839 741 2840 22 0 49
கிராமம் 25030 24233 400 356 10 0 25
தோட்டப்புறம் 3461 606 341 2484 12 0 21

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 28491 24962 3302 51 95 54 27
கிராமம் 25030 24321 603 30 15 37 24
தோட்டப்புறம் 3461 641 2699 21 80 17 3

கைத்தொழில்

[தொகு]

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பகுதியில் அமைந்துள்ளப்படியால் இரத்தினக்கல் அகழ்வும் அதன் வியாபாரமும் முக்கிய கைத்தொழிலாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அயகம பிரதேச சபை இணையத்தளம்". பார்க்கப்பட்ட நாள் 14 செப்டெம்பர் 2024.

உசாத்துணைகள்

[தொகு]


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயகம&oldid=4089870" இலிருந்து மீள்விக்கப்பட்டது