மீட்டர்
மீட்டர் | |
---|---|
அலகு முறைமை | அ.மு அடிப்படை அலகு |
அலகு பயன்படும் இடம் | நீளம் |
குறியீடு | m |
அலகு மாற்றங்கள் | |
1 m இல் ... | ... சமன் ... |
ஐக்கிய அமெரிக்க/பிரித்தானிய வழக்கமான அலகுகள் | ≈ 3.2808 அடி |
≈ 39.370 அங்குலம் |
மீட்டர் (metre அல்லது meter, இலங்கை வழக்கு: மீற்றர்) என்பது அனைத்துலக முறை அலகுகளில் நீள அளவின் அடிப்படை அலகு ஆகும்.[1] மீட்டரின் ஆங்கிலக் குறியீடு m ஆகும். தமிழ்க் குறியீடு மீ என்பதாகும். இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 அங்குலங்களுக்குச் சமமாகும் (தோராயமாக 39.37 அங்குலங்கள்)
துவக்கத்தில் புவியின் நிலநடுக் கோட்டிலிருந்து வட துருவம் (கடல் மட்டத்தில்) வரையிலான தொலைவில் ஒன்றில் ஒரு கோடி பங்காக வரையறுக்கப்பட்டது. அளவியல் குறித்த அறிவு மேம்பட்டதை அடுத்து இது படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டு வந்தது. 1983 ஆம் ஆண்டு முதல் மீட்டர் என்னும் நீளத்தைத் கீழ்க்காணுமாறு துல்லியமாக வரையறுக்கிறார்கள்: வெற்றிடத்தில் ஒளியானது 1⁄299,792,458 நொடியில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர்.[2]
வரலாறு
[தொகு]மீட்டர் என்னும் பெயர்
[தொகு]நீளத்தை அளக்க பத்தின் அடிப்படையிலான பதின்ம முறை (decimal system) ஒன்று உலகம் தழுவிய முறையாக இருக்கவேண்டும் என்று முதல் முதல் 1668 ஆம் ஆண்டு சான் வில்க்கின்சு (John Wilkins) என்னும் ஆங்கிலேய மெய்யியலாளர் தன் முன்மொழிவைப் பதிவு செய்தார்.[3][4] 1675 ஆம் ஆண்டு டிட்டோ லிவியோ புராட்டினி (Tito Livio Burattini) என்னும் இத்தாலிய அறிவியலாளர், தன்னுடைய மிசுரா யுனிவெர்சாலே (Misura Universale "பொது அளவீடு") என்னும் உரையில் மீட்ரோ கட்டோலிக்கோ (metro cattolico) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்; இச்சொல் கிரேக்க மொழிச்சொல்லாகிய மெட்ரோன் கத்தோலிக்கோன் (καθολικόν}} (métron katholikón) என்னும் சொல்லில் இருந்து பெற்றது. இதனைப் பிரான்சிய மொழியில் மெட்ரே (mètre) என்று அழைக்கின��றார்கள். பிரான்சிய மொழியில் இருந்து 1797 ஆண்டு முதல் ஆங்கிலத்திலும் இது எடுத்தாளப்பட்டு வருகின்றது.[5] பிரித்தானிய ஆங்கிலேயர்கள் metre என்றும், அமெரிக்கர்கள் meter என்றும் எழுத்துக்கூட்டல்கள் கொண்டு பயன்படுத்துகின்றனர். இலங்கையில் மீற்றர் என்று பயன்படுத்துகின்றனர்.
நெடுவரை அடிப்படையில் அமைந்த வரையறை
[தொகு]பிரெஞ்சுப் புரட்சியின்போது பிரெஞ்சு அறிவியல் அகாதமியால் அனைத்து அலகுகளுக்கும் ஒரே ஒப்பளவை தீர்மானிக்க ஒருங்கிணைக்கப்பட்ட குழு, பதின்ம அமைப்பில் அமைய வேண்டும் என்ற பரந்துரையை அக்டோபர் 27, 1790இலும் நீளத்திற்கான அடிப்படை அலகாக வட துருவத்திற்கும் நிலநடுக் கோட்டிற்கும் இடையேயான தொலைவில் கோடியில் ஒரு பங்காகவும்[6] அது 'அலகு' (பிரெஞ்சு மொழியில் mètre)என் பெயரிட்டு மார்ச் 19, 1791இலும் பரிந்துரைத்தது.[7][8][9] இதனை 1793இல் கூடிய தேசிய மாநாடு ஏற்றுக் கொண்டது.
மீட்டர் துண்டு முன்மாதிரி
[தொகு]1870களில் ஏற்பட்ட துல்லிய தொழில்நுட்பங்களின் பின்னணியில் புதிய மீட்டர் சீர்தரத்தை நிலைநிறுத்த பல பன்னாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன. 1875இல் நடந்த மீட்டர் மாநாட்டில் (Convention du Mètre) பாரிசின் தென்மேற்குப் புறநகர்ப் பகுதியான செவ்ரெயில் நிரந்தரமாக பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம் (BIPM: Bureau International des Poids et Mesures) அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீட்டர் மற்றும் கிலோகிராமிற்கான சீர்தரங்களின் முன்மாதிரிகள் கட்டமைக்கப்படும்போது அவற்றை பாதுகாப்பதுடன் தேசிய அளவிலான சீர்தர முன்மாதிரிகளை வழங்கவும் அவற்றிற்கும் மெட்ரிக் அல்லாத அளவை சீர்தரங்களுக்கிடையான ஒப்பளவுகளை பராமரிக்கவும் இந்த புதிய அமைப்பு நிறுவப்பட்டது. இதன்படி 1889இல் எடைகள் மற்றும் அளவைகளுக்கான முதல் பொது மாநாட்டில் இந்த அமைப்பு புதிய முன்மாதிரி மீட்டர் துண்டை வெளிப்படுத்தியது. தொன்னூறு விழுக்காடு பிளாட்டினமும் பத்து விழுக்காடு இரிடியமும் கொண்ட கலப்புலோக சீர்தர துண்டின் இரு கோடுகளுக்கு இடையே பனிக்கட்டியின் உருகுநிலையில் அளக்கப்பட்ட தொலைவு பன்னாட்டு முன்மாதிரி மீட்டர் எனப்பட்டது.[10]
1889ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நிலையிலேயே இன்றும் பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட முன்மாதிரித் துண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. சீர்தர மீட்டர் துண்டு அளவைகள் குறித்தும் இதனைக் கொண்டு அளப்பதால் ஏற்படும் பிழைகள் குறித்தும் தேசிய சீர்தரங்கள் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் (NIST) ஆவணங்களில் காணலாம்.[11]
கிருப்டான்-86 உமிழ்வின் சீர்தர அலைநீளம்
[தொகு]1893இல், முதன்முதலாக ஓர் சீர்தர மீட்டர் அளவை ஆல்பர்ட் ஏ. மைக்கல்சன் ஓர் குறுக்கீட்டுமானி மூலம் அளந்தார். இந்தக் கருவியை உருவாக்கிய மைக்கல்சன் ஒளியின் ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தை நீளத்தின் சீர்தரமாகக் கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்தவராவார். 1925 வாக்கில் பிஐபிஎம்மில் குறுக்கீட்டுமானம் மூலம் அளப்பது வழமையாயிற்று. இருப்பினும் பன்னாட்டு முன்மாதிரி மீட்டர் 1960 வரை சீர்தரமாக இருந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற பதினோராவது மாநாடு புதிய அனைத்துலக முறை அலகுகள் (SI) முறையில் வெற்றிடத்தில் கிருப்டான்-86 அணுவின் மின்காந்த நிழற்பட்டையில் ஆரஞ்சு-சிவப்பு உமிழ்கோட்டின் 1,650,763.73 அலைநீளங்களை ஒரு மீட்டராக வரையறுத்தது.[12]
ஒளியின் வேகம்
[தொகு]உறுதியின்மையை குறைக்கும் நோக்குடன் 1983இல் கூடிய அளவைகள் மாநாடு மீட்டரின் வரையறையை மாற்றி ஒளியின் வேகத்தையும் நொடியையும் கொண்டு தற்போதுள்ள வரையறை அறிமுகப்படுத்தியது :
- மீட்டர் என்பது வெற்றிடத்தில் ஒளியால் 1⁄299,792,458 நொடி இடைவெளியில் செல்லும் பாதையின் நீளமாகும்.[2]
இந்த வரையறை வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தை சரியாக நொடிக்கு 299,792,458 மீட்டர்களாக நிலைநிறுத்தி உள்ளது. இந்த வரையறுப்பின் மற்றொரு துணைப்பகுதியாக அறிவியல் அறிஞர்கள் தங்கள் சீரொளிகளை துல்லியமாக அலையதிர்வுகள் மூலம், அலைநீளங்களின் நேரடி ஒப்பிடுதல்களை விட ஐந்தில் ஒருபங்கு குறைவான உறுதியின்மையுடன், ஒப்பிட முடிகிறது. ஆய்வகங்களிடையே ஒரே முடிவுகளைப் பெறுவதை உறுதி செய்யும் வண்ணம் இந்த மாநாட்டில் ஐயோடினால்-நிலைநிறுத்தப்பட்ட ஈலியம்–நியான் சீரோளி மீட்டரை உருவாக்க "பரிந்துரைக்கப்பட்ட கதிர்வீச்சாக" அறிவிக்கப்பட்டது.[13] மீட்டரை வரையறுக்க பிஐபிஎம் தற்போது ஈலிநியான் சீரொளி அலைநீளத்தை பின்வருமாறு கணக்கிடுகிறது: மதிப்பிடப்பட்ட சார்பு சீர்தர உறுதியின்மை (U) of 2.1×10−11 உடன் λஈநி = 632,991,212.58 பெமீ.[13][14][15] இந்த உறுதியின்மை ஆய்வகங்களில் மீட்டரை நிலைநிறுத்துவதில் ஓர் தடையாக உள்ளது. அணுக் கடிகாரத்திலிருந்து பெறப்படும் நொடி அளவில் இருக்கும் உறுதியின்மையை விட பலமடங்கு கூடுதலான உறுதியின்மையுடன் உள்ளது.[16] இதனால், ஆய்வகங்களில் மீட்டர் ஈலிநியான் சீரொளியின் 1579800.762042(33) அலைநீளங்களாக ஏற்றுக் கொள்ளபடுகிறது (வரையறுக்கப்படுவதில்லை). இதில் அலை அதிர்வைக் கண்டறிவதில் உள்ள பிழையே உள்ளது.[13]
SI அளவுகளில் மீட்டரின் கீழ்வாய், மேல்வாய் அலகுகள்
[தொகு]மீட்டரின் ஒன்றுக்கும் கீழான பதின்ம முறை அளவுகளும் (பதின்ம கீழ்வாய் அலகுகள்), ஒன்றைவிட மேலான பதின்ம முறை அலகுகளும் (பதின்ம மேல்வாய் அலகுகள்) சீரான SI முன்னொட்டுச் சொற்கள் கொண்டு குறிக்கப்பெறுகின்றன. அவற்றைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.
அடுக்கு | பெயர் | குறியீடு | அடுக்கு | பெயர் | குறியீடு | |
10−1 | டெசிமீட்டர் (டெசிமீ) | dm | 101 | டெக்காமீட்டர் (டெமீ) | dam | |
10−2 | சென்டிமீட்டர் (செமீ) (அ) சதம மீட்டர் |
cm | 102 | எக்டோமீட்டர் (எக்மீ) | hm | |
10−3 | மில்லிமீட்டர் (மிமீ) | mm | 103 | கிலோமீட்டர் (கிமீ) | km | |
10−6 | மைக்ரோமீட்டர் (மைமீ) | µm | 106 | மெகாமீட்டர் (மெமீ) | Mm | |
10−9 | நானோமீட்டர் (நாமீ) | nm | 109 | கிகாமீட்டர் (கிகாமீ) | Gm | |
10−12 | பைக்கோமீட்டர் (பைமீ) | pm | 1012 | டெர்ராமீட்டர் (டெர்மீ) | Tm | |
10−15 | ஃபெம்டோமீட்டர் (ஃபெர்மி) | fm | 1015 | பேட்டாமீட்டர் (பேமீ) | Pm | |
10−18 | அட்டோமீட்டர் (அமீ) | am | 1018 | எக்சாமீட்டர் (எக்மீ) | Em | |
10−21 | செப்டோமீட்டர் (செப்மீ) | zm | 1021 | சேட்டாமீட்டர் (சேமீ) | Zm | |
10−24 | யொக்டோமீட்டர் (யோக்மீ) | ym | 1024 | யொட்டாமீட்டர் (யோட்மீ) | Ym |
மற்ற அலகுகளின் சமநிலை
[தொகு]மெட்ரிக் அலகு மற்ற அலகுகளில் | மற்ற அலகுமெட்ரிக் அலகுகளில் | |||||||
---|---|---|---|---|---|---|---|---|
1 மீட்டர் | ≈ | 1.0936 | யார் (நீள அலகு)கள் | 1 யார் (நீள அலகு) | ≡ | 0.9144 | மீட்டர்கள் | |
1 மீட்டர் | ≈ | 39.370 | அங்குலங்கள் | 1 அங்குலம் | ≡ | 0.0254 | மீட்டர்கள் | |
1 சென்டிமீட்டர் | ≈ | 0.39370 | அங்குலம் | 1 அங்குலம் | ≡ | 2.54 | செ.மீ | |
1 மில்லிமீட்டர் | ≈ | 0.039370 | அங் | 1 அங் | ≡ | 25.4 | மி.மீ | |
1 மீட்டர் | ≡ | 1×1010 | அங்குசுட்ராம் | 1 அங்குசுட்ராம் | ≡ | 1×10−10 | மீட்டர் | |
1 நனோமீட்டர் | ≡ | 10 | அங்குசுட்ராம் | 1 அங்குசுட்ராம் | ≡ | 100 | பிக்கோமீட்டர்கள் |
இந்த அட்டவணையில் , "அங்" மற்றும் "யார்" முறையே "பன்னாட்டு அங்குலத்தையும்" "பன்னாட்டு யாரையும்" குறிக்கின்றன[17]
- "≈" எனில் "ஏறத்தாழ சமமான";
- "≡" எனில் "வரையறைப்படி சமன்" அல்லது "மிகச்சரியாக சமன்."
ஒரு மீட்டர் மிகச்சரியாக 10,000⁄254 அங்குலத்திற்கும் 10,000⁄9,144 யார்டுகளுக்கும் சமன்.
ஒன்றிலிருந்து மற்றது பெற மூன்று "3" கொண்டு எளிய நினைவி ஒன்றுள்ளது.
- 1 மீட்டர் ஏறத்தாழ 3 அடி–3 3⁄8 அங்குலங்களுக்கு சமனானது.[18] இதிலுள்ள பிழை 0.125 மிமி கூடுதலாகும்.
சான்றுகோள்கள்
[தொகு]- ↑ "Base unit definitions: Meter". National Institute of Standards and Technology. பார்க்கப்பட்ட நாள் 2010-09-28.
- ↑ 2.0 2.1 "17th General Conference on Weights and Measures (1983), Resolution 1". பார்க்கப்பட்ட நாள் 2012-09-19.
- ↑ An Essay towards a Real Character and a Philosophical Language (Reproduction)
- ↑ An Essay towards a Real Character and a Philosophical Language (Transcription)
- ↑ Oxford English Dictionary, Clarendon Press 2nd ed.1989, vol.IX p.697 col.3.
- ↑ ('decimalization is not of the essence of the metric system; the real significance of this is that it was the first great attempt to define terrestrial units of measure in terms of an unvarying astronomical or geodetic constant.) The metre was in fact defined as one ten millionth of one quarter of the earth's circumference at sea-level.' Joseph Needham, Science and Civilisation in China, Cambridge University Press, 1962 vol.4, pt.1, p.42.
- ↑ Paolo Agnoli,Il senso della misura: la codifica della realtà tra filosofia, scienza ed esistenza umana, Armando Editore, 2004 pp.93-94,101.
- ↑ "Rapport sur le choix d'une unité de mesure, lu à l'Académie des sciences, le 19 mars 1791" (in French). Gallica.bnf.fr. 2007-10-15. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Paolo Agnoli and Giulio D’Agostini,'Why does the meter beat the second?,' December, 2004 pp.1-29.
- ↑ National Institute of Standards and Technology 2003; Historical context of the SI: Unit of length (meter)
- ↑ Beers & Penzes 1992
- ↑ Marion, Jerry B. (1982). Physics For Science and Engineering. CBS College Publishing. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 4-8337-0098-0.
- ↑ 13.0 13.1 13.2 "Iodine (λ≈633 nm)" (PDF). MEP (Mise en Pratique). BIPM. 2003. பார்க்கப்பட்ட நாள் 16 December 2011.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|work=
(help) - ↑ கலைச்சொல் 'சார்பு சீர்தர உறுதியின்மை' அவர்கள் வலைத்தளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது: "Standard Uncertainty and Relative Standard Uncertainty". The NIST Reference on constants, units, and uncertainties: Fundamental physical constants. NIST. பார்க்கப்பட்ட நாள் 19 December 2011.
- ↑ National Research Council 2010
- ↑ National Institute of Standards and Technology 2011.
- ↑ Astin & Karo 1959.
- ↑ Well-known conversion, publicised at time of metrication.
மேலும் படிக்க
[தொகு]- Alder, Ken. (2002). The Measure of All Things : The Seven-Year Odyssey and Hidden Error That Transformed the World. Free Press, New York பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7432-1675-X