திருவரசு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திருவரசு, பெயர்ச்சொல்.
- (திரு+அரசு)
வைணவர்களின் மொழி
விளக்கம்
[தொகு]- வைணவச் சமயத்தில் மரணமடைந்த ஆழ்வார்கள், ஆசாரியர்கள், குருக்கள், சன்னியாசிகள் ஆகியோரின் உடல்களைப் பள்ளிப்படுத்திய இடங்களில் சிறிய சந்நிதிகள்/கோவில்களைக்கட்டி, அதில் அவர்களுடைய திருவுருவச்சிலைகளையும் நிறுவி, பூசை முதலான நியமங்களை முறையாகச் செய்வர்...இவ்விடங்களில் அந்தப் பெரியோர்களின் நல்லாசிகள் என்றும் நிலைத்து அரசாட்சி செய்வதால் இந்தத் திருக்கோயில்களுள்ள இடங்கள், அந்தந்தப் பெரியோரின் பெயரோடு சேர்த்து திருவரசு எனப்படுகிறது...எடுத்துக்காட்டாக மணவாள மாமுனிகளின் சமாதிக் கோவில் உள்ள இடம் மணவாள மாமுனிகள் திருவரசு...இத்தகைய கோவில்களுக்கு முன்னால் பொதுவாக ஓர் அரசமரம் வளர்க்கப்படும் வழக்கமும் உள்ளதால், இந்தப் பெயர் உண்டானதாகவும் சொல்வர்...பிற சமயத்தினர் இவ்விடங்களை பிருந்தாவனம் என்பர்.
- இந்துக்களின் புனிதமானத் தாவரங்களில் ஒன்றான அரசமரம், கோயில், குளக்கரைகளில், இறந்த மனிதர்களின் உடல்களை அழிக்கும் சுடு, இடு காடுகள் சிலவற்றில், மற்றும் ஈமக்காரியங்கள் நடைபெறும் இடங்களில் வளர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +