உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கேள்

முத்து நல்ல முத்துக்களாம்
கேள், தம்பி, கேள்—உள்ளே
முழ்கி, மூழ்கி எடுத்திடுவார்
கேள், தம்பி, கேள்.

எத்த னையோ மீன்வகைகள்
கேள், தம்பி, கேள்—இங்கே
எண்ண யாரால் முடியுமென்றே
கேள், தம்பி, கேள்.

மழையே பெய்யா திருந்திடினும்,
கேள், தம்பி, கேள்—கடல்
வறண்டு போவ தில்லையடா
கேள், தம்பி, கேள்.

அலைகள் போடும் சத்தமடா
கேள், தம்பி, கேள்—அதை
அடக்க யாரால் முடியுமென்றே
கேள், தம்பி, கேள்.


84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/90&oldid=1724779" இலிருந்து மீள்விக்கப்பட்டது