உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின்
வாழ்த்து

பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள்
பாடிப் பாடி மகிழ்வெய்த
தெள்ளித் தெளித்த செந்தமிழில்
தேனார் கவிகள் செய்துதரும்
வள்ளி யப்பா, நின்இனிய
‘மலரும் உள்ளம்’ என்றென்றும்
புள்ளி மயில்வா கனன்அருளால்
புவியில் வாழ்க, வாழ்கவே.

பாலும் பழமும் ஏனம்மா?
பசியே இல்லை’ எனக்கூறிச்
சீலச் சிறுவர் சிறுமியர்கள்
சிறந்த ‘மலரும் உள்ளம்’ இதைக்
காலை மாலை என்றென்றும்
கற்று மகிழச் செயும்இந்த்ர
ஜாலக் கவிஞன் வள்ளியப்பன்
தழைத்து வாழ்க, வாழ்கவே.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/7&oldid=1724769" இலிருந்து மீள்விக்கப்பட்டது