உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அறுந்து தனியாய் இருந்திட்ட
அந்த மூக்குத் துண்டதனைப்
பறந்து வந்த ஒருகாக்கை
பாய்ந்து தூக்கிச் சென்றதுவே.

கையைத் தட்டி வைத்தியரும்
கதறிப் பார்த்தார். ஆனாலும்
ஐயோ, ஏதும் பயனில்லை!
அலறித் துடித்தாள், கறுப்பாயி.

காக்கை மூக்கைத் தின்றதுவோ!
கடலில் போட்டு விட்டதுவோ !
மூக்கை இழந்த சூர்ப்பனகை
முக்கா டிட்டுத் திரும்பினளே!


198