உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - பாரதியின் புதிய ஆத்திசூடி O

முடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிக்கும் திறனுள்ளவர்களைப் பாராட்டுகிறோம்.

வீரம், தீரம், துணிவு, சூரத்தனம் ஆகியவை சிறந்த மனிதர்களின் அரிய குணங்களாகும். பன்முகமான வீரமும் தீரமும் அரும் செயல்களும் செய்து முடிக்கும் வீரர்களைச் சூரர் என்று போற்றுவர்.

'சொல்லுக்கடங்காவே - பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம்'

என்று பராசக்தியின் சூரத்தனங்களைப் போற்றி பாரதி பாடுகிறார், நமது நாட்டில் எண்ணற்ற வீரர்களும் தீரர்களும் சூரர்களும் இருந்திருக்கிறார்கள்.

சூரத்தனம் என்றால் எதற்கும் அஞ்சாமல் எந்த எதிர்ப்பிற்கும் பயமின்றி வரும் விளைவுகளைப் பற்றி அஞ்சாமல் எந்தவிதமான கலக்கமும் இன்றி, ஒரு குறிக்கோளுக்காக ஒரு லட்சியத்திற்காக கொண்ட குறிக்கோளுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவைகளைத் திரணமாக மதித்து அசாதாரணமான துணிச்சலுடன் எடுத்த காரியத்தை நிறைவேற்றும் அருங்குணமாகும். இத்தகைய சூரத்தனம் மிக்கவர்களைச் சூரர்கள் என்று கூறுகிறோம்.

சொல்லுக்கடங்காத சூரத்தனங்களை நாம் நிறைவேற்றிட நமக்கு பராசக்தி வல்லமை தந்திடுவாள் என்று பாரதி கூறுகிறார்.

நமது கதைகளில் இதிகாசங்களில் புராணங்களில் சூரர்களைப் பற்றியும் அவர்களுடைய அருஞ்செயல்களைப் பற்றியெல்லாம் கூறப்பட்டிருக்கின்றன. அவர்கள் எல��லாம் நமது நாட்டின் நடமாடும் பாத்திரங்களேயாவர்.

நமது விடுதலைப் போராட்டக் காலத்தில் நாம் பல வீரர்களையும், தீரர்களையும், சூரர்களையும் நெஞ்சில் துணிவு கொண்ட பலரையும் கண்டிருக்கிறோம். அவர்களை எல்லாம் போற்றிப் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும்.