Q அ.சீனிவாசன் 57
ஆகியோர்களின் சாதனைகள், அவர்கள் நடத்திய போர்கள், அப்போர்களின் வெற்றி தோல்விகள், அரசியல் சூழ்ச்சிகள், அரசர்கள் நாட்டிற்குச் செய்த நன்மை, தீமைகள் ஆகியவைகளைப் பliறிய விவரங்களை விளக்கிச் கூறுவதாகும் என்பது ஒரு சாரார் கருத்தாகும்.
வரலாறு என்பது அரசர்களுடைய பரம்பரை பற்றிய வரலாறு மட்டுமல்லாமல், நாட்டு மக்களின் வாழ்க்கை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய முக்கிய தலைவர்கள், வீரர்கள், மகான்கள், அறிஞர்கள், ஞானிகள் முதலியவர்களின் சாதனைகள் சாகசங்கள், வீர தீரச் செயல்கள், போதனைகள் பற்றி விவரங்களும் அவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த அரிய நிகழ்ச்சிகளின் தொகுப்பாகும் என்பது மற்றொரு சாரார் கருத்தாகும்.
நமது இலக்கியங்கள் பலவும் கூட மன்னர்கள் மற்றும் இதர வீரர்களின் வீரம், காதல் பற்றியும் அருஞ் செயல்களை பற்றியும் அதிகமாகக் கூறுவதைக் காண்கிறோம்.
வரலாறு பற்றிய இத்தகைய கருத்துக்கள் முழுமையான - ன்மையைப் பிரதிபலிப்பதாகக் கூற முடியாது. வரலாற்றில் முக்கிய தலைவர்கள், அரசர்கள், ஆட்சியாளர்கள், வீரர்கள் முக்கிய தலைவர்கள், அறிஞர்கள், ஞானிகள் முதலியோர்களின் பங்கும், பாத்திரமும் முக்கியமானது தான். அதே சமயததில் சமுதாய நிகழ்ச்சிகளில் அரசியல் நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் மக்களுடைய பொருளாதார வளர்ச்சி, சமுதாய, கலாசாரா பண்பாட்டு வளர்ச்சி முதலி��வைகளில் பெரும்பாலான மக்களின் பங்கும் பாத்திரமும் முக்கியமானதாகும். அவைகளைப் பற்றியுள்ள விவரங்களும் விளக்கமாக அறியப்பட வேண்டும்.
உதாரணமாக, நமது நாட்டில் கைபர் கணவாய் மூலமாக வந்த பல படையெடுப்புகள், மெளரியப் பேரரசு, குப்த பேரரசு, சுல்தான்கள் ஆட்சி, மொகலாயர் ஆட்சி, மத்திய இந்தியாவில் தேன்றிய பல பேரரசுகள், சாளுக்கியர்கள், கலிங்கர்கள், தெற்கில் - சேர, சோழ, பாண்டிய, பல்லவப் பேரரசுகள், விஜயநகரப் பேரரசு,