உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பாரதியின் புதிய ஆற்றிஆடி-9

வேற்றுமை காரணமாக கால வளர்ச்சியின் காரணமாகவும் இலக்கண முறையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை இந்த சூத்திரம் இலக்கண விதி முறையைக் குறிப்பிட்டிருந்த போதிலும் இந்த விதி முறை எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர பழையன அழிதலும் புதியன வருதலும் என்று கூறப்படவில்லை.

இந்தப் பேருலகில் உள்ள அத்தனை பொருள்களும் அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும், உயிர்ப் பொருள்களும் ஜடப் பொருள்களும் அனைத்தும் இடை விடாத இயக்கத்தில் இருந்து கொண்டிருக்கின்றன. இந்த இடைவிடாத இயக்கம் வளர்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டே இருக்கின்றன. இந்த வளர்ச்சியினால் புதிய புதிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்தப் புதிய மாற்றங்கள் பழைய நிலைகளை மறுத்துப் புதிய நிலைகளை அடைந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு அத்தனை பொருள்களிலும் இயக்கமும், வளர்ச்சியும் மாற்றமும் புதிய நிலைகளும் வந்து கொண்டே இருக்கின்றன. இடத்தாலும் காலத்தாலும் இந்த மாற்றங்களும் புதிய நிலைகளும் வந்து கொண்டே இருக்கின்றன.

விதைகள் முளைத்துப் பயிராகிச் செடியாகிக் கொடியாகி மரமாகி வளர்ச்சி பெற்று மாற்றம் அடைந்து படிப்படியாக புதிய நிலைகளை அடைகின்றன. முட்டைகள் குஞ்சுகளாகி பறவைகளாகி புத���ய நிலைகளை அடைந்து வளர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்கின்றன. விலங்குகள் குட்டி போட்டு அவை படிப்படியாக பல மாற்றங்களைப் பெற்று வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன.

மனிதன் குழந்தையிலிருந்து படிப்படியாக மாற்றங்கள் பெற்று பெரிய மனிதனாக வளர்ச்சி அடைகிறான். அதே போல் மனித சமுதாயமும் ஆரம்ப காலத்தில் இருந்து படிப்படியாக பல மாற்றங்களைப் பெற்று வளர்ச்சியடைந்து கொண்டே வந்திருக்கிறது. இன்று மிகப் பெரிய அளவில் இனங்களாக, நாடுகளாக தேசங்களாக உலக அமைப்பாக வளர்ந்திருக்கின்றன.