2 பாரதியின் புதிய ஆத்திசூடி 0
நமது நாடு அன்னிய ஆட்சியிலிருந்து கட்டாயம் விடுதலை பெற வேண்டும். அத்துடன் பாரதியின் விடுதலைப் போராட்ட சிந்தனை நின்று விடவில்லை, அவர் உலக விடுதலையைப் பற்றி சிந்தித்தார், இந்திய சமுதாயத் தி ல் அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும், பிற்படுத்தப்பட்டும் உள்ள அனைத்துப்பகுதி மக்களும் முழுமையான விடுதலையும் சமத்துவமும், சமவாய்ப்புகளும் பெற வேண்டும் என்று சிந்தித்தார்,
பாரதி பெண் விடுதலையைப் பற்றி சிந்தித்தார். பெண் விடுதலை பற்றி தனியான பாடல்களிலும், சக்தி, பராசக்தி, முத்துமாரி, கண்ணம்மா, பாஞ்சாலி சபதம் முதலிய பல பாடல்களிலும் பெண் விடுதலைக் கருத்துக்கள் இழையோடி இருப்பதைக் காண்கிறோம்.
பாரதி தன்னுடைய விடுதலைக் கருத்துக் களி ல் அச்சத்திலிருந்து மனிதனும் மனிதனுடைய மனமும் அறிவும் விடுதலை பெற வேண்டும் என விரும்பினார், அவருடைய புதிய கருத்துக்களை புதிய விடுதலைக் கருத்துக்களை, மனித உயர்வு மனித மேன்மைக்கான கருத்துக்களை இளம் உள்ளங்களிலேயே பதியச் செய்ய வேண்டும் என்று கருதியே புதிய ஆத்திசூடியும், பாப்பா பாட்டும் எழுதியுள்ளார்.
ஆத்திசூடி என்பது தமிழில் ஏற்கனவே ஒளவையார் எழுதிய பாடல்களாகும். ஒளவையார் தனிச்சிறப்பு மிக்க பெண்பாற் புலவராவர். ஒளவையாரைப் பற்றி பாரதி தமிழ் மகள் என்றே குறிப்பிடுகிறார், ��ளவையார் சாதாரண மக்களின் புலவராவார், சாதி அமைப்புகளை எதிர்த்து “சாதி இரண்டொழிய வேறில்லை” என்று எழுதிய பெருமைக்குரிய தமிழ்ப் புலவராவார், அவர் குழந்தைகளுக்கான அறநூலாக ஆத்திசூடியை எழுதினார். ஒளவையின் ஆத்திசூடி தமிழகத்தின் ஆரம்பப் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு பழைய
ஆத்திசூடி போதாது. புதிய காலத்திற்கேற்ற முறையில் புதிய சிந்தனைகளை வளர்ப்பதற்குப் புதிய ஆத்திசூடி தேவை என்று