இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
70 தாய்மை
நின்றனளவும், தீயினில் தூசாக்கும் செப்பமாய தெய்வ நெறியினைக் காட்டி, அந்நெறி வழியே உலக உயிர்கள் அனைத்தும் ஒழுகி வாழ வேண்டுமெனச் சொல்லி வாழ்ந்து காட்டி அவனோடு கலந்தார் அடிகளார்.
இவ்வாறு உலகமக்கள் நலமே தன் உற்ற நலம் எனக் கொண்டு வாழ்ந்த வழுவிலா மணிவாசகர் திருக் கோத்தும்பியில் வையம் வாழ-சமுதாயம் பொய்யல்லா மெய் நெறியில் செழிக்க வழிகாட்டி, அதே வேளையில் இறைவனின் தன்மையினையும் நல்லாரை நாடி வந்து அவன் அருள் செய்யும் திறத்தினையும் நமக்கு இதன் வழியே என்றென்றும் உணர்த்திக் கொண்டிருக்கிறார். அவர் காட்டிய அருள்நெறி பற்றி வாழின் நலன் உண்டு. வாழ முயல்வோமா? வழியறிந்து செல்வோமா?