உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தாய்மை

அடியினை அடைதலே முத்தி என்ற உண்மையினையும் அந்த அடியின் பெருமை எத்தகையது என்பதையும் முதல் பாட்டிலேயே நன்கு விளக்குகிறார். பிரமன் முதலாய தேவர்கள் யாவராலும் காணமுடியாத சேவடி எனப் பாட்டு முழுவதும் அத்திருவடிப் புகழ்ச்சியாகவே உள்ளது. ஆயினும் அப்படிப்பட்ட அப்பாலுக்கப்பாலாய அந்தத் திருவடி தன்னை எப்படி ஆட்கொண்டதென்பதை அடுத்த பாட்டில் விளக்கி அந்த அருளாட்சியால் தான் தன்னை அறிந்த பெருநிலையினை வியக்கின்றார்.

கான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்?

என்னை யார் அறிவார்? வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊனார்முடை தலையில் உண்பலிதேர் அம்பலவன் தேனார் கமலமே சென்றுஊதாய் கோத்தும்பி’ என்பது பாடல்

இதன் முதல் அடியில் இதுவரையில் எல்லா ஞானி களும் கேட்கும் கேள்விகளை யெல்லாம் வரிசையாக அடுக்கி, அவற்றிற்கு விடை காணவேண்டுமானால் இறைவன் அருள் பெறலே வழி என்பதையும் காட்டி விட்டார். மதிமயங்கி ஊனார்முடைத் தலையில் உண்பவி தேர் அம்பலவன்’ என்பதற்கு ‘இறைவன் மதிமயக்க முற்றுப் பிரமகபாலத்தில் பிச்சை ஏற்றான்’ என்றுபொருள் கூறுவார். அது பொருந்தாது. மதிமயங்கி என்பது புத்தி கெட்ட பிரமனைக் குறிக்கும் தொடர். மதியில் மயங்கியவனாகிய பிரமன்’ என்பது விளக்கம். அன்றி இறைவனே மதிமயங்கினான் என்றால் முழுமைக்கே இழுக்கன்றோ! மேலும் அச் செயல்மூலம் தருக்குவாருக்குத் தான் அப்பாற்பட்டவன் என்பதையும் அத் தருக்குவார் தலைமையை-தலையை அறுத்தெறிந்து மறம் கடிந்து அறம் ஒம்புவதே ஆண்டவன் தொழில் என்பதையும், இவ்வாறே மறம்கடியும் வீரனான இறைவன் அடியவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/58&oldid=684842" இலிருந்து மீள்விக்கப்பட்டது