உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தாய்மை

பாடல் அமைப்பு

இந்தப் பாடல்களின் அமைப்பினை நோக்கும் போது தொல்காப்பியர் பொருள் அடிப்படையில் காட்டும் இலக் கணமே நமக்குப் புலப்படும். அகநானூறு புறநானூறு போன்ற பாடல்கள், பாடுவோர் ஒருவரை முன்னிறுத்தி, அகவி'த் தாம் கூறும் பொருள்களைக் கூறுவனவாகவே அ ைம கி ன் ற ன என்பது நன்கு விளங்குகின்றது. புறநானூற்றில் மன்னனை அகவிக் கூறும் பாடல்களே பலவாக உள்ளமையினைக் காண்கின்றோம். எனவே அவை அ ைன த் து ம் அகவற்பாக்களாலேயே அமைகின்றன. எங்கோ ஒருசில இடங்களில் வேற்றுப் பாடலமைப்புக்கள் விரவுகின்றமை காண்கின்றோமாயினும், அ ைவ யும் அகவலுக்கிடையில் பாவினை நிறைவு செய்யும் வகையில் பயன்பட வந்துள்ளன என அறிகின்றோம். எனவே முன்னின்று அகவி அறம் உரைக்கும் தன்மையில் இப் புறப் பாடல்கள் அமைகின்றமையின் அவை அகவலால் ஆக்கப் பெற்றன. அகம் பற்றிய அகநானூறு, நற்றிணை, குறுந் தொகை போன்றவற்றின் பாடல்களுள் ஒருவன் அல்லது ஒருத்தியை அகவித் தம் கருத்தைக் கூறுவதாக அமைகின்ற மையின் அவையும் அகவல்களாகவே அமைந்துள்ளன. பாண்டியன் அறிவுடைநம்பியின் படைப்புப் பலபடைத்து’ எனத் தொடங்கும் புறநானூற்றுச் செய்யுளைப் போன்று எங்கோ ஒருசில செய்யுட்கள் பொருள் பொதிந்து அறம் காட்டும் வகையில் அமையினும், பெரும்பாலான பாடல்கள் மன்னரையோ, மற்றவரையோ முன்னிறுத்திப் பேசுவன: வாகவே அமைகின்றன. அப்படியே அகப்பாடல்களுள்ளும் பல, தலைவன் தலைவி போன்றோரை முன்னிறுத்திப் பா டு வ ன வாக வே அமைந்துள்ளமையைக் காண ...முடிகின்றது. ஒருசில இலக்கண வரம்பு இகவா வகையில்: அஃறிணைப் பொருன்களை முன்னிறுத்திப் பாடுவதையும் காண்கின்றோம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/148&oldid=684539" இலிருந்து மீள்விக்கப்பட்டது