பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 143.
இறுதியில் சுட்டிக் காட்டுகின்றார். இவற்றுள் மெய்ப் பாட்டினைத் தொல்காப்பியர் தனியாக ஒர் இயலில்
காட்டிவிடுகின்றார். மற்றவைகளை ஒவ்வொரு சூத்திரத். தால் விளக்கிக் காட்டி அவை பாட்டொடு கொண்ட தொடர்புகளைச் சுட்டிக் காட்டுகின்றார். காட்டி
இவற்றின் மரபு நிலை இன்னதென்று விளக்கி, அடுத்து
வரும் மரபியலுக்கும் ஒரு தோற்றுவாய் செய்கின்றார்.
இவற்றையெல்லாம் உள்ளடக்கித் தமிழ்ச் சமுதாயம் இத்தகையது என என்றென்றும் உலகுக்குக் காட்டிக் கொண்டிருப்பதுவே பா என்பதைத் தொல்காப்பியர் பலப்பல வகையில் தம் செய்யுளியல் சூத்திரங்களில்
விளக்கிக் கொண்டு செல்கின்றார். -
- நால் வகைப் பாக்களைக் காட்டு���் போது அவற்றின்
எல்லைகளையும் பெருமை சிறுமைகளை வரையறுக்கும் அடிகளையும் சுட்டுவர் தொல்காப்பியர். மேலும் அப் பாவகை நான்கும் ஒன்றென்று உறழ்ந்து சிறந்து நிற்கும்
வகையினையும் ஒவ்வொரு பாவின் வகைகளையும் அப். பாக்கள் கொண்டு காட்டும் பொருள் அமைப்புகளையும்
விளக்குவர் அவர். நெடுவெண்பாட்டு, குறு வெண்பாட்டு,
அங்கதம் முதலியவற்றையும் கலிப்பாவில் வரும் பல்வகைப்
பிரிவுகளையும் அவர் நன்கு விளக்குகிறார். பிற்காலத்தில்
தனியாகக் காட்டப்பெறும் பாவிளக்கங்களைப் பற்றித் தனியாகக் கூறாவிடினும் அவை அக்காலத்தில் வழக்கத்தில்
இருந்த வகைகளையும் அவற்றால் அறியப்பெறும் பொருள் நலன்களையும் தொல்காப்பியர் சுட்டிக் காட்டுகின்றார்.
அப்பாடல்களில் உறுப்புக்களின்-சிறப்பாகக் கலிப்பா உறுப்புகளின் பெயர்களையும் அமைப்பையும் சுட்டிக்
காட்டி அவற்றின் நிலம், செயல் முதலியவற்றை விளக்கு. கிறார். இவ்வாறு பலப்பல வகையில் பாவின் திறம். காட்டி, அக்காலத்தில் வாழ்ந்த தமிழர் வாழ்வின் நிலைக்
களனான பாவின் பயன், நலன், செறிவு, திட்பம் இவை. களை விளக்கி, அவை என்றென்றும் வாழ வழி செய்துள்