140 - தாய்மை
ஆசிரிய நடைத்தே வஞ்சியேனை வெண்பா நடைத்தே கலியென மொழிப
... - (செய். சூ. 108) என்றும் காட்டுவர். பண்புற வென்றதனால் ஆசிரியமும் வெண்பாவும் இயல்பெனவும் மற்றவை விகாரமெனவும் கொள்க’ எனக் காட்டி நச்சினார்க்கினியர் இயல்பான பாக்கள் இரண்டெனவே கிளத்துவர். இனி, இப் பா வகைகள் பொருள்களின் அடிப்படையிலேயே சிறக்க, அவற்றொடு பொருந் தி ய பிறவற்றையும் சிறிது காண்போம். பாவும் பிறவும்
செய்யுளியலில் பாவின் இலக்கணம் காட்டிய ஆசிரியர் மேல் அதனொடு பொருந்திய பிறவற்றையும் சுட்டிக் காட்டுகின்றார். முன் 79 ஆம் சூத்திரத்தில்,
பாட்டு உரைநூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொல்லோ டவ்வேழ் கிலத்தும்.’ - . (செய். சூ. 79) என்று கூறியபடி பாட்டின் அடியொற்றிய மற்றவைகளை யும் சிறிது எண்ணிப் பார்த்தல் ஏற்புடைத்தாகும் எனக் கருதுகிறேன். பாக்களால் ஆகிய நூலின் தன்மையை விளக்கிய தொல்காப்பியர், அந்நூல்களின் அமைப்பில் வரும் ‘பா'வின் தன்மையைச் சூத்திரம் என்ற பெயரால் விளக்கிக் காட்டுகிறார்.
சூத்திரம் என்பது,
- ஆடி கிழலி னறியத் தோன்றி
காடுத லின்றிப் பொருள்கனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே ‘
|செய். சூ. 1691 எனக் காட்டுவர். சிறு ஆடியில் உலகனைத்தும் ஒளிரக் காட்டுவது போன்று, சிறு சூத்திரத்து விளக்கம் காட்டப்