சிலப்பதிகார உரை நடை 67 யின் வரலாற்று இறுதியில் தமிழ்நாடும் பிற நாடுகளும் அக் கண்ணகிக்கு ஆற்றிய வழிபாட்டை உரைநடையில் சொல்லுகின்ருர். . ஆசிரியர் உரை பெறு கட்டுரை என்ற தலைப்பிலே நான்கு பகுப்பில் கண்ணகி வழிபாட்டையும் அதன்வழி வளமு ற்ற தமிழ் காட்டையும் காட்டுகிருர். உரைக்கப் பெறுகின்ற கட்டுரை அல்லது வசனம் என்ருே, உரையாகக் கட்டுரைக் கப்பெற்ற பகுதியென்ருே இதற்குப் பொருள் கொள்ளலாம். காட்டிலே வழங்கிய நல்ல சொற்களைத் தொகுத்து அன்று கிகழ்ந்த நிகழ்ச்சியினை உலகுக்குக் காட்டும் கட்டுரையாக இது அமைகின்றது. இதோ அவர் வாக்கு - அன்று தொட்டுப் பாண்டியன் நாடு, மழை வறம் கூர்ந்து, வறுமை எய்தி, வெப்பு நோயும் குருவும் தொடர, கொற்கையில் இருந்த வெற்றி வேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிர வரைக் கொன்று களவேள்வியால் விழாவோடு சாந்தி செய்ய, நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும் நீங்கிற்று. அது கேட்டு, கொங்கிளங் கோசர், தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழாவோடு சாந்தி செய்ய, மழை தொழில் என்றும் மாரு தாயிற்று. - அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான், கங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத்து, ஆங்கு அறந்தை கெடுத்து வரந்தரும் இவள் என, ஆடித் திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப, மழை விற்றிருந்து, வளம் பல பெருக்கி, பிழையா விளையுள் நாடாயிற்று. அது கேட்டு, சோழன் பெ ரு ங் கிள் வளி, கோழி யகத்து எத்திறத்தானும் வரந்தரும் இவள்
பக்கம்:தமிழ் உரை நடை.pdf/76
Appearance