இருபதாம் நூற்ருண்டின் விடியலிலே 215 மறைந்துவிடுமோ என்று எண்ணக் கூடிய அளவிற்குக் கலப்பு ஏற்பட்டது என்னலாம். எனவே, அறிஞர் மறை மலே அடிகளார் போன்ற ஆய்வாளர்கள் அதைத் தடுக்க வேண்டுமெனக் கருதினர்கள். அடிகளார் வேதாசலம்’ என்ற தமது பெயரையே மாற்றி மறைமலை அடிகள்' என அமைத்துக் கொண்டனர். மற்ருேர் அறிஞராகிய சூரிய நாராயண சாத்திரியார்' என்பவர் தம் பெயரைப் பரிதிமாற் கலைஞன் எனவே ஆக்கிக் கொண்டார். மறை மலே அடிகளார் தம் பெயரை மாற்றிக் கொண்டதோடமையாது தமிழில் எழுதும் ஒவ்வொரு நூலையும் தனித் தமிழாகவே எழுத முற்பட்டார். சமயத் துறையில் இவர் ஆறுமுக காவலருக்கு இளைத்தவர் அல்லர் என்னலாம்; நடராசன் என்னும் கூத்தரசனைத் தம் வீட்டிலேயே குடி அமர்த்தி விழா வாற்றுபவர்; அவனது ஆடலுக்கு அரும்பொருள் கண்டு போற்றுபவர். எனினும், அவர் தம் சமய உண் மைகளை விளக்க நினைத்த அந்த நிலையிலேயும் தனித் தமிழையே கையாண்டார். அவர்தம் நூல்கள் தனித் தமிழ்க் கடல்கள். இன்று தமிழ் நாட்டில் பெரிய அளவில் காணப் பெறும் தனித் தமிழ் இயக்கத்திற்கு வித்திட்டவர் மறை மலே அடிகளேயாவர். அவர் வழித் தமிழில் உரை கடை நல்ல வளம் பெற்றதோடு தனித் தமிழ் மரபும் வளரலாயிற்று, - இன்று நாட்டில் எத்தனையோ பேர் மொழி-நாடுபற்றிப் போராடத் தயாராய் இருக்கலாம்-இருக்கின்ற னர். எனினும், அன்று-இந்த நூற்ருண்டின் விடியலிலேயாரும் கினே க் காத நிலையிலே, தாம் ஒருவராய்த் தனி நின்று தனித்தமிழில் அனைத்தையும் எழுத முடியும் என்று காட்டி, அதைக் கடைசி வரையில் தம் வாழ்வின் குறிக்கோளகக் கொண்டிருந்த பேராசிரியர் மறை மலே அடிகளாரைத் தமிழர் என்றென்றும் போற்றக் கடமைப்
பக்கம்:தமிழ் உரை நடை.pdf/224
Appearance