இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனைச் செம்மலர்கள் se த. கோவேந்தனர்
- ஒரு குழந்தைக்குச் சரியான தந்தையாக இருப்பதைவிட, ஒரு
குழந்தைக்குத் தந்தையாவது மிகவும் எளிதானது.
வி.ஒ.குளுசேவ்ஸ்கி
- எண்னதான் சிறந்த பள்ளிக் கல்வி அளிக்கப்பட்டாலும், நல்ல
தந்தை இல்லாதபோது நல்ல வளர்ப்பு என்பதும் இருக்காது.
நிகராய் கரம்சின்
- குழந்தைகளின் அனைத்துத் தேவைகளையும் எதிர்பார்த்து, அனைத்துச் சிந்தனைகளிலும், செயல்களிலும் அதற்கு வழிகாட்டு வது என்பது, வாழ்வதற்கே தகுதியற்றதாக அதனைச் செய்து விட நேரும், அத்தகைய குழந்தைகளும்செயலாக்கம்பிக்க மக்களாகக் கூட ஆகக் கூடுமென்றாலும், இழப்புக்கேடாக அவர்கள் தன்னலம் மிகுந்தவராகவும், அளவுக்கதிகமான தண்னம்பிக்கை கொண்ட வராகவும் கூட இருப்பர். பியோடர் லெஸ்காப்ட்
- வெகுசில இழிவுகளால் துன்புற்ற குழந்தைகளே, தங்களைப்
பற்றிய மிகுந்த மான உணர்வுடன் வளர்வர்.
நிகராய் செர்னிசேவ்ஸ்கி
- அறிவற்ற கருணையும்கூட, தேவையற்ற கருமையைப் போன்றே அறிவற்ற மடமையானது. ஏ.எப்.பிசெம்ஸ்கி
- ஒழுக்கம் பற்றிய செல்வாக்கின் ஆற்றலே, மற்ற பிற ஆற்றல் களை விட வலிமை படைத்தது. நிகலாய் கோகோல்
- தனது அன்பினாலும், கருணையினாலும் எதனையும் செய்து முடிக்க இயலாதவரால், கருமையாக இருப்பதால் மட்டும்கூட எதனையும் செய்து முடிக்க இயலாது. ஆன்டன் செகாவ்
- குழந்தைகளை வளர்ப்பது என்பதே, குரும்ப வாழ்வின் சிறப்பான நோக்கமும், குறிக்கோளும் ஆகும். கணவன் மனைவியிடையேயும், தந்தை தாய்க்கிடையேயும் உள்ள உறவு முறையே, குழந்தைகளின் முக்கியமான பள்ளிக் கூடமாகும். வாசிலி சுகோம்லின்ஸ்கி
174