பெண்பா வகை . 85
இடையே ஒரசையோ இரண்டிசையோ வந்தால் அதை ஆசு என்று சொல்வார்கள்; அந்த வெண்பா ஆசிடையிட்ட i W Q GQ G u . u K63, Gaur என்ற நேரசை ஒன்று மட்டும் வந்தமையால் இது ஓராசு இடையிட்ட நேரிசை வெண்பா.
“குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்றலைய பூதப் பொருபடையாய்-என்றும்
இளையா யழகியா யேறுர்ந்தா னேறே
உளையாயென்னுள்ளத் துறை.”
இந்தப் பாட்டில் இரண்டாம்: அடியின் மூன்றாம் சீர்
பொருபடையாய் என்பது. அது பொரு என்று இருந்தால் மலர் என்ற வாய்பாட்டையுடைய குறளின் இறுதிச்சீர் ஆகும். அதற்கு மேல் படையாய் (நிரை நேர்) என்று இரண்டு அசைகளோடு ஒட்டிப் பின்வரும் தனிச் சொல் லோடு தளையும் பொருளும் பொருந்த இணைவதால், இது ஈராசு இடையிட்டநேரிசை வெண்பா.
இரண்டாம்.அடியின் மூன்றாம் சீரைக் கொண்டு இந்த வேறுபாட்டை உணர வேண்டும். -
‘கண்டு’ என்று இருந்தால் அது இருகுறள் நேரிசை வெண்பாவாகும். அதுவே கண்ட’ என்று வந்தால் (கண்+ட) ஒராசிடையிட்ட நேரிசை வெண்பாவாகும். ‘பிறகு என்று வந்தால் இருகுறள் நேரிசை வெண்பா ஆகும். அதுவே பிறகோ என நின்றால், ஒராசிடையிட்ட நேரிசை வெண்பா ஆகிவிடும். வெண்பாவின் இடையில் வரும் சீர் இது; ஆகையால் குற்றியலுகர ஈறுடைய காசு, பிறப்பு என்ற இரண்டு வாய்பாடுகளுக்கு ஏற்ப வருவனவெல்லாம் இருகுறள் நேரிசை வெண்பா ஆகும். மற்றவை யாவும் ஆசிடையிட்டவையே.