எழுசீர் விருத்தம் 55
பகுதி, பின் மூன்று சீர் ஒரு பகுதியாகப் பிரித்து அந்த மோனை காட்டுகிறது.
கூவிளம் புளிமா கருவிளம் தேமா கருவிளம் கூவிளம் புளிமா கூவிளம் புளிமா கருவிளம் புளிமா
கருவிளம் கருவிளம் புளிமா கூவிளம் தேமா கூவிளம் தேமா
கருவிளம் கூவிளம் புளிமா கூவிளம் புளிமா கருவிளம் தேமா கூவிளம் கூவிளம் புளிமா.
இப்படி வாய்பாடு ஊட்டிப் பார்த்தால் ஒவ்வோர் அடியிலும் நான்கு விளமும், மூன்று மாவும் வந்திருப்பது தெரிகிறது. முதன் நான்கு சீர்களில் விளச்சீரும் மாச்சீரும் மாறி மாறி வர, பின் மூன்று சீர்களில் இரண்டு விளமும் ஒரு மாவுமாக வந்திருக்கின்றன. இவற்றில் பொதுவாக விளச்சீர்களும் மாச்சீர்களும் வந்தன. குறிப்பிட்டுத் தேமாத் தான் வர வேண்டும் என்பது போன்ற வரையறை யில்லை. அதாவது, கூவிளம் வந்த இடத்தில் கருவிளம் வரலாம்; தேமா வந்த இடத்தில் புளிமா வரலாம்.
பின்வரும் பாடல்களில் நிரப்ப வேண்டியவற்றை நிரப்பிப் பயிலுக. -
வேதமும் வேத அங்கமும் உணர்ந்த வித்தக - அடைந்து
போதமுற்றொளிரும்--
புகழுறப்-பெரியர்
ஆதரத் தோடு -- -
அறிந்தவர் --
- தெளிவார் அவர்நனி முயல்வார்
திகழுறு நூல்பல கற்பார்.