உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவி பாடலாம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்���ு பார்க்கப்படவில்லை

50 கவி பாடலாம்

சுருதி யோசை முழவோசை

புளிமா தேமா புளிமாங்காய் சுகங்கள் பூவைக் கரும்பொருள்கள் புளிமா தேமா கருவிளங்காய் உரைசெ யோசையியலிசைநீ

புளிமா தேமா கருவிளங்காய் டோசை யுழவ ருழவோசை

தேமா புளிமா புளிமாங்காய் பொருவி லாலை பாயோசை

புளிமா தேமா தேமாங்காய் பொழில்வா யலர்பாய் Dமிறோசை புளிமா புளிமா புளிமாங்காய் வரிசை மாதர் சிலம்போசை

புளிமா தேமா புளிமாங்காய் வளைநீ ரோசை தனின்மிகுமால்

புளிமா தேமா கருவிளங்காய்.

இதில் 1,2,4,5 ஆகிய நான்கு சீர்களும் மாச்சீர்களாகிய

நேரீற்று ஈரசைச்சீர்கள். 3, 6 ஆகிய இரண்டும் காய்ச்

சீர்களாகிய நேரீற்று மூவசைச் சீர்கள். மாச்சீர் வரும், இடங்களில் தேமா, புளிமா என்னும் இரண்டும்

வந்துள்ளன. காய்ச்சீர் வரும் இடங்களில் தேமாங்காய், புளி

மாங்காய், கருவிளங்காய் என்னும் மூன்றும் வந்துள்ளன:

கூவிளங்காயும் வரலாம். முன்னே சொன்ன அறுசீர் விருத்தத்தில் யாவும் ஈரசைச்சீர்கள். சிறுபான்மை முதற் சீரும், நான்காஞ் சீரும் மூவசைச் சீராக வரும். இந்தப் பாட்டிலோ ஈரசைச் சீர்களும், மூவசைச் சீர்களும் வருகின்றன. கண்டபடி வராமல் இன்ன இடத்தில் இன்ன சீர் வரும் என்ற வரையறை இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/51&oldid=655887" இலிருந்து மீள்விக்கப்பட்டது