உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவி பாடலாம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்���ு பார்க்கப்படவில்லை

6. வாய்பாடுகள்

யாப்பிலக்கணத்தில் ஒரு பாட்டின் உறுப்பாகிய அசைகள் இரண்டு என்பதையும், அவை நேரசை, நிரையசை என்று பெயர் பெறும் என்பதையும் பார்த்தோம். எழுத்துக்கள் சேர்ந்து சொல் ஆவது போல, அசைகள் சேர்ந்து சீர்கள் ஆகும். இது இன்ன பாடல் என்று தீர்மானம் செய்வதற்குச் சீர்களே துணையாக நிற்கின்றன. அசைகள் இரண்டானாலும் அவற்றின் பலவகைச் சேர்க்கையினால் சீர்கள் நான்கு வகைகளாக அமையும். அவற்றை இனிப் பார்ப்போம்,

ஒர் எழுத்துத் தனியே நின்று பொருளைத் தெரிவித்தால் அதுவே சொல் ஆகும். அதை ஒரெழுத்தொரு மொழி என்று சொல்வார்கள். அது போல ஒர் அசையே சீராக வருவதுண்டு. அதை ஓரசைச் சீர் என்று சொல்வார்கள். நேர் அசை தனியே நின்று சீராவதும், நிரை அசை தனியே நின்று சீராவதும் உண்டு. அப்படி வருபவை இரண்டு சீர்கள்.”

இந்த ஓரசைச் சீர்கள் மிகுதியாக வருவதில்லை. வெண்பாக்களில் ஈற்றடியின் ஈற்றில் வரும். வேறு சில இடங்களிலும் வருவதுண்டு. வெண்பாக்களில் வரும் என்பதை மட்டும் இப்போது நினைவில் வைத்துக் கொண்டால் போதும். -

இரண்டு அசைகள் சேர்ந்து வரும் சீர்கள் நான்கு; நேர்நேர், நிரைநேர், நேர்நிரை, நிரைநிரை என்பவை அவை. ‘இதந்தரு மனையி னிங்கி” என்ற பாடலில் ஈரசைச் சீர்கள் வந்திருக்கின்றன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/43&oldid=655878" இலிருந்து மீள்விக்கப்பட்டது