உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவி பாடலாம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
��ப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினா விடைகள் 245

71.

72.

73.

இரண்டு உதடுகள் ஒட்டாமல் பாடும் பாடலுக்குப் பெயர் என்ன?

நிரோட்டகம் என்று பெயர். இதழ் ஒட்டாமல் பாடிய பாடல்களையுடைய யமக அந்தாதிகள் தமிழில் உண்டு. அவற்றை நிரோட்டக யமக அந்தாதி என்றும் இதழகல் யமக அந்தாதி என்றும் சொல்வார்கள். திருச் செந்தில் நிரோட்டக யமக அந்தாதி என்பது ஒர் உதாரணம். சதகச் செய்யுளுக்கும் விருத்தத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

நீதியை உரைக்கும் சதகங்களில் வரும் செய்யுட்கள் யாவும் பன்னிரு சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம். அறப்பளிசுவர சதகம், குமரேச சதகம், மணவாள நாராயண சதகம், கைலாசநாதர் சதகம் என்பவை ஆசிரிய விருத்தங் களால் ஆனவை. ஆனால், கோவிந்த சதகம் என்பது மாத்திரம் கட்டளைக் கலித்துறையில் அமைந்தது. தொண்டைமண்டல சதகம், கொங்கு மண்டல சதகம் முதலியவையும் கட்டளைக் கலித்துறையில் அமைந்தவை. சோழ மண்டல சதகம் ஆசிரிய விருத்தங்களால் ஆகியது. திருவாசகத்திலுள்ள திருச்சதகம் என்பது பத்துப் பாட்டுக்கு ஒருவகைச் செய்யுளாகப் பத்து வேறு வகையான பாடல்களால் ஆனது.

நாற்கவி என்பதற்குத் தாங்கள் கூறியபடி வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பது போல் மதுரகவி, வித்தார கவி, சித்திரகவி, ஆசுகவி இவைகளும் வழங்குகின்றனவே; இவைகளின்

பொருள் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/246&oldid=655852" இலிருந்து மீள்விக்கப்பட்டது