உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவி பாடலாம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
��ப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினா விடைகள் 243


66.

67.

69.

பாக்கள் நான்கு; வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா,

வஞ்சிப்பா. ஆசிரியமும் வெண்பாவும் இணைந்த

மருட்பா என்பது ஒன்று. ஒவ்வொன்றிலும் பல வகை உண்டு. மருட்பா அல்லாத ஒவ்வொரு பாவுக்கும், தாழிசை, துறை, விருத்தம் என்று மூன்று இனங்கள் உண்டு. அவற்றிலும் பல வகை இருக்கின்றன.

வசன கவிதைக்குத் தமிழ் இலக்கண ரீதியாக அமைதி உண்டா? -

இல்லை; ஆனாலும் புதுவது புகுதல் என்ற இலக்கணப்படி வசன கவிதை பாடலாம். அதில் கவிதைத் தன்மையும் செறிவும் இருக்க வேண்டும்.

தமிழ்க் கவிதையின் எல்லாச் சந்தங்களையும் நான் எந்த நூலில் காண முடியும்?

எல்லா வகையான பாடல்களுக்கும் உரிய உதாரணங்களைச் சிதம்பரச் செய்யுட் கோவை, பாப்பா வினம் என்னும் நூல்களில் காணலாம்.

ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பூக் கூறப்படுகிறதாமே; நால்வகைப் பாடலுக்குமுரிய நால்வகைப் பூக்கள் யாவை?

தாமரை, முல்லை, குவளை, நெய்தல்.

சந்தம் என்றால் என்ன? ஒசை அமைதியினால் உண்டாகும் உருவம். சந்தம் என்ற சொல்லுக்குப் பாட்டு என்றும், ஒசை என்றும் பொருள். ஆறுசீர் விருத்தங்களில் வெவ்வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சந்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/244&oldid=655850" இலிருந்து மீள்விக்கப்பட்டது