உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவி பாடலாம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
��ப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 கவி பாடலாம்

சொன்னலத்தகைப் பொருள் கருத்தினிற் சிறந்தாங்கெனப்

பெரிதும்

கலங்களு ரெய்தி விடுப்பவும்

சிலம்பிடைச் செலவும் சேணிவந் தற்றே.”

இதுவும் சிந்தடி வஞ்சிப்பாவே. முதல் நான்கடிகளும் சிந்தடிகளாக வந்து, பெரிதும் என்ற தனிச்சொற் பெற்று, மேல் இரண்டடி ஆசிரியச் சுரிதகம் பெற்று முடிந்தது இது. முன் அடிகளில் காய்ச்சீரும் கனிச்சீரும் விரவி வந்தன.

வஞ்சிப்பா இனம் வஞ்சிப்பாவுக்கும் தாழிசை, துறை, விருத்தம் என்று ளமூன்று இனங்கள் உண்டு.

வஞ்சித் தாழிசை : இரு சீரடி நான்காய் அமைந்த பாடல்கள் ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வரும்.

“மடப்பிடியை மதவேழம்

தடக்கையான் வெயின்மறைக்கும் இடைச்சுர மிறந்தாற்கே நடக்குமென் மனனேகாண்.”

“பேடையை இரும்போத்துத்

தோகையால் வெயின்மறைக்கும் நாடக மிறந்தார்க்கே ஓடுமென் மனனேகாண்.”

“இரும்பிடியை இகல்வேழம்

பெருங்கையால் வெயின்மறைக்கும் அருஞ்சுர மிறந்தார்க்கே விரும்புமென் மனனேகாண்.” இந்த மூன்றும், பிரிந்து சென்ற தலைவனை எண்ணி வருந்தும் தலைவி அப்பிரிவால் வருந்திக் கூறும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/203&oldid=655803" இலிருந்து மீள்விக்கப்பட்டது